- Advertisement -
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் இதுவரை எந்த ரீமேக் படங்களிலும் நடிச்சதில்லை. ஆனால் எனக்கு அண்ணாமலை படத்தை ரீமேக் செய்ய விருப்பம் உள்ளது. இதற்கான உரிமை குறித்து உடனடியாக பேசத் தொடங்குவேன். ஒரு நல்ல இயக்குனரை மட்டும் முடிவு செய்ய வேண்டும். தலைவரிடம் ஆசி பெற்று அந்த படத்தின் பணியை தொடங்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். 1990களில் வெளியான அண்ணாமலை மாஸ் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.





