- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்தான் -...

குட் பேட் அக்லி படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்தான் – வெளியான தகவலால், அடடா என புலம்பும் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் கடந்த 5 நாட்களில் ரூ. 180 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இந்த படத்துக்கு கிடைத்துள்ள அபார வரவேற்பு அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஏனெனில் இதற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் சரியாக போகாததால் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தை பொருத்த வரை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், பேன் பாயாக இருந்து காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை பெருமை பாடி இருக்கிறார். வாலி தீனா வரலாறு பில்லா அமர்க்களம் படங்களில் இருந்து ரெபரென்ஸ் எடுத்து படம் முழுவதும் அஜீத்குமாரை பல கெட்டப்புகளில் தெறிக்க விட்டிருக்கிறார்.

படம் முழுவதும் பல பழைய பாடல்களை கொண்டு வந்து ரசிகர்களுக்கு செமையாக வைப் ஏற்றிவிட்டு அவர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நாயகியாக திரிஷா, வில்லனாக அர்ஜூன்தாஸ் இதர கேரக்டர்களில் பிரபு பிரசன்னா சுனில் பிரியா வாரியர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். சிம்ரன் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் முதலில் வில்லன் கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகர் எஸ்ஜே சூர்யா தான். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக அசத்திய எஸ்ஜே சூர்யாவை தான் இந்த படத்திலும் வில்லனாக ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு இருக்கிறார்.

ஆனால் கேம் சேஞ்சர் இந்தியன் 2 ராயன் என ஏற்கனவே பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்த நிலையில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி இயக்குனராக எஸ்ஜே சூர்யா அறிமுகமானதே வாலி படத்தில்தான். அவரை இயக்குனராக தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததே வாலி படத்தில் நடித்த அஜீத்குமார்தான்.

அப்படிப்பட்ட அஜீத்குமாருடன் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட எஸ்ஜே சூர்யாவுக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தால் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகுதான் இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன்தாஸ கமிட் செய்யப்பட்டு அவர் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் அடுத்தடுத்த படங்களில் ஒன்றில் ஏகேவுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

சற்று முன்