- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன ஒரு கெட்டப், என்ன ஒரு செட்டப், தனது செல்ல நாயின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய...

என்ன ஒரு கெட்டப், என்ன ஒரு செட்டப், தனது செல்ல நாயின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய விஷால் – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், தாமிரபரணி, ஆம்பள, பூஜை, துப்பறிவாளன், மருது, ஆக்சன் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் விஷால் பிலிம் பேக்டரி என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

vishal

நடிப்பு மட்டுமின்றி அரசியல், நடிகர் சங்க பொறுப்பு, சமூக நலப்பணிகள் என பல்வேறு துறைகளில் முனைப்பு காட்டும் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாக இருக்கும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்பத்தை தரும் என்று காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் அவருடன் ரித்து வர்மா, எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி அன்று “மார்க் ஆண்டனி” படம் வெளியாக உள்ள வேளையில் இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Vishal-Dog

இந்நிலையில் நடிகர் விஷால் 14 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து வளர்த்து வரும் செல்ல நாய்க்கு பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் : அவரது செல்ல நாய்க்கு பிறந்தநாள் தொப்பி அணிவித்து அதனை சோபா மீது அமர வைத்து கேக் வெட்டி தனது நாயின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த கொண்டாட்டத்தின் போது அவரது அப்பா, அம்மா, உதவியாளர் என ஒரு சிலர் அருகில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்த விஷால் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் மகனே” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்