- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனை கேவலப்படுத்தி பேசினாரா நடிகர் விஷால், தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அவரது பேச்சு...

கமல்ஹாசனை கேவலப்படுத்தி பேசினாரா நடிகர் விஷால், தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அவரது பேச்சு – இயக்குநர் ஷங்கரையும் மறந்துட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போதைய சர்ச்சை நாயகன் யாரென்றால் அது நடிகர் விஷால்தான். அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை கரடுமுரடாக பேசி விமர்சனத்தில் சிக்கிக் கொள்வதே இவரது வாடிக்கை. இப்படி சமீபத்தில் இவரால் எழுந்த சர்ச்சைகளும், இவர் மீது வந்த விமர்சனங்களும் ஏராளம்.

2 கோடி, 3 கோடி ரூபாய் எடுத்துட்டு யாரும், சினிமா தயாரிக்கலாமுன்னு சென்னைக்கு வந்துடாதீங்க என, மார்க் ஆண்டனி படம் சக்சஸ் மீட்டில் பேசி, பிரச்னையை கிளப்பினார். அப்படி என்றால் குட்நைட், சித்தா, தண்டடட்டி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றது எப்படி என பலரும் எகிறிக்கொண்டு சண்டைக்கு வந்தனர்.

- Advertisement -

அதன்பின்பு மும்பை சென்ற விஷால், அங்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக, ரூ. 6.5 லட்சம் கொடுத்துவிட்டு வந்து வீடியோ வெளியிட்டார். அதுவும் விமர்சனத்துக்குள்ளானது. அதுமட்டுமின்றி பாலிவுட் படவுலகிலும் இதனால் விஷால் மீது பலருக்கும் கடுப்பு ஏற்பட்டது.

இப்போது கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படம் ஓடாது என்று நடிகர் விஷால் கூறியிருப்பது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது லைக்கா தயாரிப்பு நிறுவனத்துக்கும், விஷாலுக்கும் ஜிஎஸ்டி தொடர்பாக ஒரு பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படம் ஓடாவிட்டால், லைகா நிறுவனம் மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்பது போல விஷால் பேசியிருக்கிறார்.

- Advertisement -

லைக்கா நிறுவனத்துக்கும், நடிகர் விஷாலுக்கும் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தால் அது அந்த எல்லையோடு பேச வேண்டும். இந்தியன் 2 படத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த படத்தை இயக்கி வருபவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவர்களது படத்தை பற்றி விமர்சித்து விஷால் பேசியது மிகப்பெரிய தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக இருப்பவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உள்ள ஒரு படத்தை பற்றி, படம் ஓடாது என எதிர்மறையான ஒரு கருத்தை பதிவு செய்திருப்பதும், அதுவும் இயக்குநர் ஷங்கரின் இயக்கும் படம் பற்றி இப்படி கூறியிருப்பதும் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர் இருவரையும் இழிவுபடுத்தும் ஒரு செயலாக உள்ளதாகவும், இதற்கு பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறுவதால், இது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்