- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் மறைவு - தமிழ் சினிமாத்துறையினர் அதிர்ச்சி

இளையராஜா மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் மறைவு – தமிழ் சினிமாத்துறையினர் அதிர்ச்சி

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானியாக போற்றப்படுபவர் இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். அவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி என்ற 3 பிள்ளைகள் இருந்தனர். இதில் மகன்கள் இருவரும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக கார்த்திக் ராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்து போன நிலையில், யுவன்சங்கர் ராஜா தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர்களது தங்கை பவதாரணி, பல படங்களில் பாடியிருக்கிறார். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

- Advertisement -

பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடியதற்காக பவதாரணி தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இன்னும் பல படங்களில் அவர் சொந்த குரலில் பாடியிருக்கிறார். இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளில் பவதாரணியும் மேடையில் பல பாடல்களை பாடி பார்வையாளர்களை அசத்துவார்.

கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி, இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் நோய் கடுமையாக முற்றிய நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.

- Advertisement -

மகள் பவதாரணியின் மறைவை அடுத்து இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகியோர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு இறுதிச்சடங்கு உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும்.

இளையராஜாவின் மகள் பவதாரணி மறைவு குறித்து தகவல் அறிந்த சினிமா நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், சக இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதத்தில் விஜயகாந்த் மறைவு பெரிய சோகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், அதற்குள் இளையராஜா மகள் பவதாரணி மறைவு, தமிழ் சினிமாத்துறையினரை அதிர்ச்சியிலும், கடும் வேதனையிலும் தள்ளியுள்ளது.

- Advertisement -

சற்று முன்