- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவ்ளோ பில்டப் பண்ணியும் பெருசா எதுவும் எடுபடலயே… நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே? -...

இவ்ளோ பில்டப் பண்ணியும் பெருசா எதுவும் எடுபடலயே… நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே? – வடிவேலு போல புலம்பும் விஷால்

- Advertisement -

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். துவக்கத்தில் அவர் நடித்த படங்கள் குறிப்பாக திமிரு, சண்டக்கோழி, செல்லமே, தாமிரபரணி, பூஜை, மலைக்கோட்டை, அவன் இவன், நான் சிவப்பு மனிதன் போன்ற பல படங்கள் ரசிகர் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இந்த படங்களில் விஷால் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது.

காதல், காமெடி, ஆக்சன் என எந்த விதமான கேரக்டராக இருந்தாலும், விஷாலின் நடிப்பு நன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக துப்பறிவாளன் படத்தில் டைரக்டர் மிஷ்கின், நடிகர் விஷாலை வேற லெவலில் காட்டி இருந்தார். கணியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் டிடெக்டிவ் ஏஜெண்டாக விஷால் நடிப்பு அழுத்தமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஷால், கடந்த 10 ஆண்டுகளாக நடித்த படங்கள் பலவும் தோல்வி படங்களாக அமைந்தன. விஷால் படம் என்றாலே ரசிகர்கள் தெறித்து ஓடும் அளவுக்கு மோசமான கதை, திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாகவும் அவர் தேவையின்றி கருத்து பேசி அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டார்.

சமீபத்தில் விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இருக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். அது மட்டும் இன்றி நடிகர் விஜயை காப்பியடித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போட சைக்கிளில் வந்தார். கேட்டால், என்னிடம் கார் இல்லை என்கிறார். ஒரு வாடகை அமர்த்திக் கொண்டு வந்திருக்கலாம், அல்லது சினிமா வட்டாரத்தில் உள்ள யாரேனும் நண்பரை அழைத்து அவரது காரில் வந்திருக்கலாம். ஒரு வாடகை கார் பிடித்து வர முடியாத அளவுக்கு விஷால் வறுமையில் உள்ளாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ரத்னம் படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்வதற்காக தனது சம்பளத்தில் 15 கோடி ரூபாயை குறைத்துக் கொண்ட நடிகர் விஷால், ரத்னம் படத்தை எப்படியாவது பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, ரெட்ஜெயின் மூவிஸ் உதயநிதி குறித்து ஆவேசமாக பேசினார். படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கரை பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுத்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கடுமையாக நடந்து கொண்டார்.

இப்படி பலவிதமான தந்திரங்கள் செய்து, அதை எல்லாமே ரத்னம் படத்தின் பிரமோவுக்கான ஒரு சூழ்ச்சியாகதான் விஷால் பயன்படுத்தினார் என்பது, பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் கடைசியில் எதுவுமே எடுபடாமல் போய் விட்டது. இதுவரை விஷால் நடித்த ரத்னம் படம் ஏழு கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூலித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே என்று நடிகர் புலிகேசி வடிவேல் ஸ்டைலில் இப்போது புலம்பி கொண்டிருக்கிறார் நடிகர் விஷால்.

- Advertisement -

சற்று முன்