- Advertisement -
Homeபொழுதுபோக்குதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் விஷால், மிரண்டு போய் தெறித்து ஓடிய தயாரிப்பாளர்கள்...

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் விஷால், மிரண்டு போய் தெறித்து ஓடிய தயாரிப்பாளர்கள் – அந்தரத்தில் தொங்கும் துப்பறிவாளன் 2

- Advertisement -

நடிகர் விஷால் நடித்த படங்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கிய இந்த படம், சிறந்த திருப்புமுனை படமாகவும் விஷாலுக்கு அமைந்தது. இந்த படத்தில் கனியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ் கேரக்டரில் விஷால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையில் படம் திரில்லாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படத்தின் 2ம் பாகத்தை இயக்கிய போது லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சித்த நிலையில், வாய்த்தகராறு முற்றியது. இதையடுத்து அந்த படம், சில வாரங்கள் படப்பிடிப்போடு நின்று போனது.

- Advertisement -

அதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி, நடிக்கப் போகிறேன் என நடிகர் விஷால் அறிவித்தார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சரியாக போகவில்லை. தொடர்ந்து அவரது படங்கள் பிளாப் ஆகியது. இதனால் விஷால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். துப்பறிவாளன் 2 படம் குறித்தும் விஷால் மவுனம் சாதித்து வந்தார்.

இந்த சூழலில், கடந்தாண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூலில் சாதித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ரத்னம் படத்தில் நடித்த விஷால், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

- Advertisement -

லண்டனுக்கு செனறு லொக்கேஷன் பார்த்துவிட்டு வந்த விஷால், படத்தில் நடிப்பவர்களுக்கான ஆடிஷனை அவரே நேரடியாக நடத்தினார். வரும் ஜூன் 15ம் தேதி துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், இப்போது படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரணம் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க முன்வந்த போது படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடி. ஆனால் நடிகர் விஷால் இப்போது படத்தின் பட்ஜெட்டை 100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளார். பட்ஜெட்டை கேட்டதும் பல தயாரிப்பாளர்கள் மிரண்டு ஓடியிருக்கின்றனர். காரணம், விஷால் நடித்த ரத்னம் படம், மிக மோசமான வசூலில், இருந்து வருகிறது. பிளாப் நாயகன் நடிக்கும் படத்தை 100 கோடி ரூபாயில் தயாரிக்க யாரும் வராததால், படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார் விஷால். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் விஷால் சம்பளமே ரூ. 70 கோடியாக இருக்குமா, என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்