நடிகர் விஜய் தி கோட் படத்தை தொடர்ந்து இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படம்தான் விஜயின் கடைசி படம் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. விஜய் இன்னும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் உறுதியானதாக இல்லை.
இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டு, அதை குடியரசு தினமான நாளை மறுதினம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் அறிவிக்க இயக்குனர் எச் வினோத் திட்டமிட்டுள்ளார். விஜய் படத்துக்கு டைட்டில் செம மாஸாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
அதனால் இந்த படத்துக்கு பல பெயர்கள் முதலில் தேர்வுக்கு வந்திருக்கின்றன. அதன்படி தலைவன் தலைவா என வைக்க நினைத்த நிலையில், தலைவா படத்தில் ஏற்கனவே விஜய் நடித்து விட்டார். இந்த படத்தில் அமலா பால் சுரேஷ் சத்யராஜ் சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏஎல் விஜய் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார்.
பிறகு தலைவன் என்ற பொருள்படும்படியாக பாஸ் என பெயர் வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே ரஜினி நடிப்பில் சிவாஜி தி பாஸ், ஆர்யா நடிப்பில் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற பெயர்களில் படங்கள் வந்துவிட்டன. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 24 படத்துக்கு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பாஸ் என்றுதான் டைட்டில் வைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் உள்ளது.
இந்த சூழலில், விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு இணைக்கும் விதமான டைட்டிலை தேடிய நிலையில்தான், விஜய் அறிமுகமான முதல் படம் நாளைய தீர்ப்பு டைட்டிலை வைத்து விடலாம் என்ற முடிவுக்கு படக்குழுவும், இயக்குனர் எச் வினோத்தும் வந்துள்ளனர். இந்த தலைப்பை கேட்டவுடன் விஜயுடன் ஓகே சொல்லி விட்டாராம்.
அதனால் வரும் 26ம் தேதியன்று குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் டைட்டில் நாளைய தீர்ப்பு என்ற பெயருடன், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட உள்ளது. மேலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் அல்ல, வரும் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் தள்ளிப் போவதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.





