நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்த ரத்னம் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் விஷாலுக்கு கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் வெற்றி முகம் இல்லை. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வி அடைந்தன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், அடுத்து அவரது சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியானது.
ஆனால் விஷாலுக்கு சூப்பர் கம்பேக் ஆக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் அமைந்தது. டைம் டிராவல் கருவை அடிப்படையாக கொண்ட இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. என்றாலும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இதில் மற்றொரு நாயகனாக நடித்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான்.
மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் வரும் ரத்னம் படம் விஷாலுக்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் அடுத்து இயக்கி, தயாரிக்க உள்ள துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பும் சினிமா ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால் துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகத்தை துவக்க, விஷால் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் உள்ளன.
இந்நிலையில் நியூயார்க் நகரில் இரவு நேரத்தில், ரோட்டில் ஒரு இளம்வயது பெண்ணுடன் விஷால் பெண்ணின் தோளில் கைபோட்டபடி ஜாலியாக வேடிக்கை பார்த்தபடி நடந்து வருகிறார். அப்போது திடீரென திரும்பி கேமராவை பார்க்கும் அவர். பிடரி பகுதியில் இருந்த தொப்பி துணியால் தலை, முகத்தை மூடியபடி அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடுகிறார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Is that Actor @VishalKOfficial walking with someone in NYC 🤔 pic.twitter.com/ddMESEuKOq
— Ramesh Bala (@rameshlaus) December 26, 2023
இந்த வீடியோ சினிமாவில் இடம்பெறும் காட்சிக்காக எடுக்கப்பட்டு, பிரமோ பரபரப்புக்காக வெளியிடப்பட்டதா அல்லது உண்மையில் விஷால் அந்த பெண்ணுடன் ஜாலியாக நடந்து சென்றபோது அவரை பின் தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோவா, இது பழைய வீடியோவா, சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய வீடியோவா என பல கேள்விகள் உள்ள நிலையில், யோவ் அனகோண்டா, யாருய்யா அந்த பொண்ணு என்ற கேப்சனுடன் அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





