- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நேரத்தில் சல்மான்கானை வைத்து இயக்கும் இரண்டு தமிழ் இயக்குனர்கள்... அதிலும் ஒருவர் அஜித்தின் ஃபேவரைட்...

ஒரே நேரத்தில் சல்மான்கானை வைத்து இயக்கும் இரண்டு தமிழ் இயக்குனர்கள்… அதிலும் ஒருவர் அஜித்தின் ஃபேவரைட் நபர்… இதில் கதாநாயகியாக வரப்போவது தமிழகத்து பைங்கிளி…

- Advertisement -

ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படமாக இது உருவாகிறது. சென்னையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அடுத்ததாக தூத்துக்குடிக்கு படக்குழு சென்றுள்ளது.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தை முடித்த கையோடு சல்மான் கான் உடன் இணைகிறார் ஏ ஆர் முருகதாஸ். இதற்கு சிக்கந்தர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையில் இந்த திரைப்படம் வெளியாகிறது. இதற்கான முழு வீச்சோடு முருகதாஸ் செயல்பட்டு வருகிறார்.

 

- Advertisement -

இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சிவகார்த்திகேயன் படம் மற்றும் சல்மான் கான் படம் இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் கையாள இருப்பதாக கூறப்படுகிறது. இது நடுவே சல்மான் கானின் இன்னொரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

 

அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா அறிந்த மிகச்சிறந்த இயக்குனர்களின் ஒருவர் விஷ்ணுவர்தன். அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை அவர் கொடுத்துள்ளார். அதிலும் பில்லா திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக ஸ்டைலிசாக அமைந்தது.

 

ரஜினி திரைப்படத்தின் பழைய கதை தான் என்றாலும், அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே எடுத்து அதில் அஜித்தை அமர வைத்து அழகு பார்த்தார் விஷ்ணுவர்தன். இதற்கு முன்பு அஜித்தை அவ்வளவு ஸ்டைலிசாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஃபிரேமிலும் தனது உழைப்பை காட்டினார் விஷ்ணுவர்தன். தற்போது அவர் பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.

 

விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா திரைப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், முரளி மகன் ஆகாஷை வைத்து நேசிப்பாயா என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கும் விஷ்ணுவர்தன் தற்போது மீண்டும் பாலிவுட் உலகிற்கு பயணமாக இருக்கிறார். சல்மான் கானுடன் இணையும் அவர் இந்த ஆண்டு இறுதியில் இதற்கான சூட்டிங்கை தொடங்க இருக்கிறார். இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளாராம். ஸ்பெயின் நாட்டில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்