- Advertisement -
Homeபொழுதுபோக்குபலருக்கும் தெரியாத உண்மை… பழம்பெரும் நடிகர் விகே ராமசாமியின் மனைவி… அந்த பிரபல நடிகரின் மனைவியா?

பலருக்கும் தெரியாத உண்மை… பழம்பெரும் நடிகர் விகே ராமசாமியின் மனைவி… அந்த பிரபல நடிகரின் மனைவியா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகர் விகே ராமசாமி. கடந்த 1950 முதல் 1990 வரை தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர் விகே ராமசாமி.

காமெடியாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் விகே ராமசாமி நடிப்பு மிக நேர்த்தியாக மட்டுமின்றி பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். அதிலும் அவரது குரல் வளமும் டயலாக் டெலிவரியும் ரசிகர்களை வெகுவாக கவரும். குறிப்பாக ஆண்பாவம் படத்தில் அதுல பாருங்க வேலாயுதம் என்ற அவரது டயலாக் இப்போதும் ரசிக்கப்படுகிறது.

- Advertisement -

தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் டும்டும்டும் தான். தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை தன் நடிப்பால் கொள்ளை கொண்ட நடிகர் விகே ராமசாமி மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் நடிப்பில் இன்னும் அவர் ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்துதான் வருகிறார். இந்நிலையில் அவரது குடும்ப வாழ்க்கை குறித்த ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்ஆர் ராதா. நடிகவேள் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தனது நாடக மன்றத்தில் நடித்த ரமணியம்மாளை அவர் காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு ரகு மற்றும் ரவி என்ற இரு மகன்கள் பிறந்தனர். ஆனால், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பின்னர் எம்.ஆர். ராதா, நடிகர் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் சிறைக்கு சென்று விட்டார்.

- Advertisement -

அந்த சூழலில், தனது 2 குழந்தைகளுடன் ரமணியம்மாள் பல துன்பங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், அவர் விகே ராமசாமியின் நாடக குழுவில் சேர்ந்தார். அவரது வாழ்க்கைச் சோகம் குறித்து அறிந்துக்கொண்ட நடிகர் விகே ராமசாமி, அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

துணை இல்லாமல் இருந்த ரமணியம்மாள், தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவரது காதலை ஏற்றுக்கொண்டார். விகே ராமசாமியின் மனைவியாக வாழ சம்மதித்த நிலையில் அவரை விகே ராமசாமி 2வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் விகே ராமசாமி, ரமணியம்மாளின் இரு மகன்களையும் தத்தெடுத்து, தனது வாரிசுகளாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்