- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிக்க விரும்பிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தது எப்படி? - சீக்ரெட்டை அம்பலப்படுத்திய...

நடிகர் தனுஷ் நடிக்க விரும்பிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தது எப்படி? – சீக்ரெட்டை அம்பலப்படுத்திய பிரபலம்!

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது என்ற ரியாலிடி காமெடி ஷோ தொகுப்பாளராக ஆரம்பத்தில் இருந்தவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அவர் நாயகனாக கடந்த 2012ம் ஆண்டில் அவர் அறிமுகமானார். இதில் ஓவியா நாயகியாக நடித்திருந்தார்.

மெரினா படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மனம்கொத்திப் பறவை எதிர்நீச்சல் காக்கிச்சட்டை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ வேலைக்காரன் என பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் பிரபல நடிகராக மாறினார். மாவீரன் டாக்டர் சீமராஜா அமரன் படங்களுக்கு பிறகு இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக உள்ளார்.

- Advertisement -

அமரன் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு பராசக்தி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். நடிகர் மோகன்ரவி அதர்வா ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

ஆனால் பராசக்தி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சூர்யா தான். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டக் கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நடிக்க சூர்யா மறுத்து வெளியேறிவிட்டார். அதன்பிறகு இந்த படத்தில் நடிகர் தனுஷ்தான் நடிக்க இருந்தார். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன்தான் கமிட் ஆகி சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, சுதா கொங்காரா எழுதிய பராசக்தி படத்தின் கதையை நடிகர் தனுஷ் முழுமையாக படித்தார். அந்த கதையைப் படித்துவிட்டு இந்த படத்தின் நான் நடிக்கிறேன் மேடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இப்போது ஏற்கனவே கமிட் ஆன கொஞ்சம் படங்கள் எனக்கு இருக்கின்றன. அதை எல்லாம் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று எவ்வளவோ சொல்லி இருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. அதே சமயத்தில் பராசக்தி படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து சுதா வீட்டு வாசலில் சென்று நின்று அமர்ந்து இந்த படத்துக்குள் சிவகார்த்திகேயன் வந்து விட்டார் என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்