- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் ரிலீஸ் ஆன அயலான், கேப்டன் மில்லர் - எந்த படம் அதிக வசூல் ஆச்சு...

கேரளாவில் ரிலீஸ் ஆன அயலான், கேப்டன் மில்லர் – எந்த படம் அதிக வசூல் ஆச்சு தெரியுமா? – என்னமோ போடா மாதவா… ஜனகராஜ் டயலாக் தான் மைண்டுல வருது!

- Advertisement -

தீபாவளி பொங்கல் பண்டிகை காலம் என்றாலே, புதுப்படங்கள் ரிலீஸ் தான் மக்களுக்கு பெரிய சந்தோஷத்தை தரும். கடந்த 1980, 90களில் தீபாவளிக்கு கண்டிப்பாக ரஜினி, கமல் படங்கள் இந்த பண்டிகை காலங்களில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும். ரசிகர்கள் போட்டிக்கொண்டு ரஜினி, கமல் படங்களை பார்ப்பார்கள்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சாதாரண நாட்களிலேயே பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதும், அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவதும் வழக்கமாகி விட்டது. எனினும் பெஸ்டிவல் பிலிம்ஸ் என்பது அதிக வருவாயை ரிலீஸ் ஆன சில தினங்களில் பெற்றுத் தருவது இப்போதும் தொடர்கிறது.

- Advertisement -

அந்த வகையில் பொங்கலுக்கு 4 படங்கள் திரைக்கு வந்தன. இதில் அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய 4 படங்களுமே பெரிய அளவில் பேசப்படவில்லை. குறிப்பாக மெரி கிறிஸ்துமஸ் படம் லிஸ்ட்டிலேயே வராமல் ஒதுங்கி விட்டது.

அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படம், குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் தியேட்டர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அயலான், கேப்டன் மில்லர் இரண்டும்தான் களத்தில் இப்போதைக்கு சவாலாக நிற்கின்றன.

- Advertisement -

அயலான், கேப்டன் மில்லர் படங்களை பொருத்தவரை முதல் படம், முழுமையாக திருப்தியளிக்கவில்லை. 2வது படம், வன்முறை, துப்பாக்கி என ஆக்‌ஷன் படமாக குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை. என்பதுதான். அதனால், வசூலை அதிகரிக்க தியேட்டர், தியேட்டராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார் அயலான் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.

இதற்கிடையே கேரளாவில் அயலான், கேப்டன் மில்லர் இரண்டுமே ரிலீஸ் ஆனது. அயலான் 103 தியேட்டர்களில் திரையிட்ட இந்த படம் 75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. போஸ்டர் செலவுக்கு கூட தாண்டவில்லை என்கின்றனர். ஏலியன் நடித்திருந்தும் குழந்தைகளுக்கு கூட இந்த படம் பிடிக்கவில்லை. ஆனால், 2 கோடிக்கு விற்கப்பட்ட கேப்டன் மில்லர் 189 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து விட்டதாம். தமிழ்நாட்டில் கழுவி கழுவி ஊற்றிய தனுஷ் படத்துக்கு கேரளாவில் இப்படி ஒரு வரவேற்பா என பலரும், என்னமோ போடா மாதவா என்றுதான் புலம்பியபடி செல்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்