- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழை ஒரு ஆபாச படம், வறுமையை காட்டி மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய்களை சம்பாதித்து...

வாழை ஒரு ஆபாச படம், வறுமையை காட்டி மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டார் – இயக்குனர் மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய பிரபலம்

- Advertisement -

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். படத்துக்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது. அடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், முன்னணி இயக்குனராக கவனம் பெற்றார்.

இப்போது 4வது படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் வெளியாகி, வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் பார்த்த பலரும் இதுபோன்ற ஒரு உணர்வுபூர்வமான படம் வந்ததில்லை என்று மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். டைரக்டர்கள் பாலா, அமீர், ராம், மிஷ்கின், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் பாராட்டு மழை பொழிந்தனர். ரஜினிகாந்தும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் வாழை படம் குறித்து பிரபல எழுத்தாளர் சாரு நிவேதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மற்றவர்கள் பாராட்டிய வாழை படத்தை, இது மிக மோசமான ஒரு ஆபாச படம் என்று சாரு நிவேதிதா குற்றம் சாட்டியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விழுந்து விழுந்து முதலில் பாராட்டியவன் நான்தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறுகையில், பரியேறும் பெருமாள் படத்தை பலரும் கண்டுக்கொள்ளாத போது, முதலில் அந்த படத்தை பாராட்டியவன் நான்தான். ஆனால் வாழை படத்தை பார்க்க ஆவலாக சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. இளம் வயதில் பூங்கொடி டீச்சரை காதலிப்பது போன்ற காட்சிகளை வைத்தது, படத்தில் மிகப்பெரிய தவறாக இருக்கிறது.

- Advertisement -

அம்மா மாதிரி, அக்கா மாதிரி இருக்கறீங்க என்று சொல்லும் அளவுக்கு உடல் அசைவுகளும், சிந்தனைகளும் இல்லை. மலையாள நடிகையை டீச்சர் கேரக்டரில் நடிக்க வைத்த முறையிலேயே இயக்குனரின் மனநிலை தெரிகிறது. அந்த ஊரில் கவர்ச்சியான பெண்ணாக அவர் மட்டுமே இருக்கிறார். டிவிஎஸ் 50 மொபட்டில் முன்னாடி உட்கார வைத்து காட்டிய பொசிஷனில் காமத்தை விதைத்துள்ளார் இயக்குனர்.

வாழை வெறும் ஆபாசப் படம் மட்டுமல்ல. சமூக விரோதப் படமாகவும் இருக்கிறது. உணர்ச்சிகளை தூண்டும் விதமாக சர்ப்ரைஸ் காட்சிகளை அடுக்கி வைத்து, மாரி செல்வராஜ் பல விஷயங்களை காட்டியிருக்கிறார். நான் கடவுள் படத்தில் குழந்தைகளை கடத்தி, ஊனமாக்கி பிச்சை எடுத்து சம்பாதிப்பதை போல, வாழை படத்தில் வறுமையை காட்டி பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் மாரி செல்வராஜ், என்று விமர்சித்துள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்