1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் அபார வெற்றி பெற்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 படம் உருவானது. ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் கமல் நடித்த இந்தியன் 2 படம் பிளாப் ஆனது. இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் பலத்த நஷ்டத்தை சந்தித்தது.
இந்த சூழலில் இந்தியன் 3 படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்துள்ள நிலையில், இன்னும் பல மாதங்கள் ஷூட்டிங் நடத்த வேண்டும். ரூ. 80 கோடி வரை தேவைப்படுகிறது என இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார். அதில் அவரது சம்பளம் ரூ. 30 கோடியும் உள்ளது.
இந்தியன் 2 படம் தந்த நஷ்டத்தில் உள்ள நாங்கள், மீண்டும் சம்பளமாக ரூ. 30 கோடி உங்களுக்கு தர முடியாது. வேண்டுமானால் படத்தை தயாரிக்கும் செலவுக்கான ரூ. 50 கோடி தருகிறோம். ஆனால் அதற்கும் இதுவரை நீங்கள் எடுத்த வரை இந்தியன் 3 படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்றும் லைகா நிறுவனம் கேட்டுக்கொண்டது. இதற்கு ஷங்கர் சம்மதிக்கவில்லை.
இந்த பஞ்சாயத்து குறித்து ஏற்கனவே ஷங்கர், லைகா நிறுவன உயர்மட்ட அதிகாரிகள், அமொிக்காவில் இருந்து கமல் ஆகியோர் கான்ப்ரன்ஸ் வீடியோ காலில் பேசி ஆலோசித்தனர். நான் சென்னை திரும்பிய பிறகு இந்தியன் 3 படம் குறித்து பேசி முடிவு செய்யலாம் என கமல் கூறியதால், லைகா நிறுவனம் பொறுமையாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியன் 2 படம் தந்த அபார தோல்விக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் மீது ரசிகர்கள் வைத்திருந்த பலத்த நம்பிக்கை பொய்த்து போய்விட்டது. அதன்பிறகு ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தில் மீண்டும் ஷங்கர் தனது வெற்றியை நிரூபிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதுவும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்தியன் 2 பிளாப் அதைத் தொடர்ந்து வெளியான கேம் சேஞ்சர் படமும் பலத்த நஷ்டத்தை சந்தித்த நிலையில், அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகும் இந்தியன் 3 படம் குறித்த எந்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடமோ எந்த ஆர்வமும் வினியோகஸ்தர்களிடமோ இல்லை. அதனால் வியாபார ரீதியாக இந்தியன் 3 பலத்த ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியன் 2 தோல்விக்கு பிறகும் கேம் சேஞ்சர் படத்தை வெற்றி படமாக தருவதில் ஷங்கர் ஆர்வமின்றி அலட்சியமாக இருந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.





