- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் படத்தை பாருங்க.. இதை ஏன் பார்க்குறீங்க.. அதையா காட்சியா எடுத்துருக்காங்க .. ரஜினியின் உறவினர்...

ரஜினியின் படத்தை பாருங்க.. இதை ஏன் பார்க்குறீங்க.. அதையா காட்சியா எடுத்துருக்காங்க .. ரஜினியின் உறவினர் காட்டம்

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னதாக தன்னுடைய ஃபேவரைட் இடமான இமயமலைக்கு கிளம்பி சென்றார். அங்கு சென்ற அவர் பாபாஜி குகையில் தியானம், ஆன்மீக தலங்களில் வழிபாடு என இருந்தார்.

அந்தப் பயணத்தை முடித்த அவர் நேராக ஜார்க்கண்ட் சென்று அம்மாநில எம்.பி. சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதனையடுத்து உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்தார். அதனையடுத்து அம்மாநில துணை முதலமைச்சர் மௌரியாவுடன் சேர்ந்து சிறிது நேரம் ஜெயிலர் படத்தை பார்த்தார்.

- Advertisement -

இந்தச் சந்திப்பின்போது யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது பெரும் சர்ச்சையானது. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒட்டுமொத்தமாக வெறுக்கிறார்கள். அதுமட்டுமின்றி யோகி ஆதித்யநாத் மோசமான ஆள். அவரது காலில் போய் ரஜினிகாந்த் விழுந்து தமிழ்நாட்டு மக்களின் மானத்தை வாங்கிவிட்டார் என்று பலரும் காட்டமாக விமர்சித்தனர்.

அதனையடுத்து அயோத்தியில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்ற ரஜினி தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ ராஜா பையா என்பவரையும் சந்தித்ததார். அதுவும் பெரும் சர்ச்சையானது.

- Advertisement -

பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சின்ன வயதுக்காரராக இருந்தாலும் அவர் துறவியாக இருந்தால் காலில் விழுவது என்னுடைய வழக்கம் என முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த பதிலும் கடுமையான ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் இப்படி ரஜினிகாந்த் செய்திருந்தால் படம் கண்டிப்பாக ஓடியிருக்காது என்றும் கூறினர்.

இந்நிலையில் நடிகரும், ரஜினியின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவதையாக ஜெயிலர் படத்தில் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் நன்றாக இருந்ததால் மட்டும்தான் படம் ஓடுகிறது. அப்படி இல்லாவிட்டால் படம் கண்டிப்பாக ஓடியிருக்காது. படம் ஹிட் ஆகிறதா என்பதை பார்த்தாலே போது. யோகி ஆதித்யநாத் காலில் விழுவதை எதற்காக பார்க்க வேண்டும். ஏன் சர்ச்சையாக்க வேண்டும்” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்