- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நாளில் இரட்டிப்பாக மாறிய வசூல், அதிகரித்த திரைகள் எண்ணிக்கை, அலப்பரை கௌப்பிய அந்தகன் அட்ராசிட்டி...

ஒரே நாளில் இரட்டிப்பாக மாறிய வசூல், அதிகரித்த திரைகள் எண்ணிக்கை, அலப்பரை கௌப்பிய அந்தகன் அட்ராசிட்டி – செம ஹேப்பி அண்ணாச்சி மூடில் நடிகர் பிரசாந்த்

- Advertisement -

நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி உள்ள படம் அந்தகன். அவரது தந்தை தியாகராஜன்தான் இந்த படத்தை தயாரித்து, டைரக்ட் செய்தும் இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் இந்தியில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற படத்தின் ரீ மேக்தான் அந்தகன்.

இந்த படத்தில், பியானோ வாசிக்கும் கலைஞராக, கண் பார்வை தெரியாதவராக நடித்துள்ளார் பிரசாந்த். பிரியா ஆனந்த் அவரது காதலியாக நடித்துள்ளார். வில்லி கேரக்டரில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக், ஊர்வசி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அந்தகன் படத்துக்கு, சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா விமர்சகர்களும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய நல்ல படம் என்று பாசிட்டிவ் ரிவ்யூ தந்துள்ள நிலையில், அந்தகன் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்ட அந்தகன் படம் முதல் நாளன்று தமிழ்நாட்டில் ரூ. 65 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டாம் நாளான நேற்று ரூ. 2.1 கோடியாக அது அதிகரித்துள்ளது. அதுவும் முதல் நாள் வசூலை விட 2 மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் முதல் நாளில் திரையிட்ட திரைகளை விட 2ம் நாளில் பல நகரங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெளிவந்த படமாக இருந்தாலும், பழைய பிரசாந்த் போலவே அதே அழகுடன் கம்பீரத்துடன் அவர் காணப்படுகிறார். நடிப்பிலும் எந்த இடத்திலும் அவரது பழைய பெர்பாமன்ஸ் குறையவில்லை. படத்தை டைரக்ட் செய்த வகையில், அவரது தந்தை தியாகராஜனும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படி பல விதங்களிலும் அந்தகன் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இது பிரசாந்த் நடித்த 50வது படமாகும். பல நடிகர்களுக்கு 50வது படம் பிளாப் ஆன நிலையில் நடிகர்கள் அஜீத்குமார், விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோருக்கு அவர்களது 50வது படங்களான மங்காத்தா, மகாராஜா, ராயன் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல, அந்தகன் பயணமும் வெற்றிக்கரமான துவக்கத்தில் இருப்பதால், செம ஹேப்பி அண்ணாச்சி மூடில் காணப்படுகிறார் நடிகர் பிரசாந்த்.

- Advertisement -

சற்று முன்