- Advertisement -
காமெடி நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சிங்காரம். ராஜவம்சம் என்ற படத்தை இயக்கிய கே வி கதிர்வேலு இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராக் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 30ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. தனது உரிமையையும் சுயமரியாதையையும் நிலைநாட்ட போராடும் ஒரு மனிதனின் பயணத்தை நகைச்சுவையும் உணர்வுபூர்வமான தருணங்களும் இணைந்த திரைக்கதையின் வழியே இதில் சொல்கிறோம். அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவற்றை கடந்து முன்னேறுவதற்கான மன உறுதியையும் மையப்படுத்தி பொழுதுபோக்குடன் கூடிய கருத்தை இந்த படம் சொல்கிறது. இந்த படத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவராக யோகி பாபு நடித்துள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.





