- Advertisement -
Homeபொழுதுபோக்குஆமை வேகத்தில் நகரும் விஜய் படம், எதிர்பார்த்த வசூல் இல்லாமல் திணறும் தியேட்டர் நிர்வாகங்கள், இந்தி,...

ஆமை வேகத்தில் நகரும் விஜய் படம், எதிர்பார்த்த வசூல் இல்லாமல் திணறும் தியேட்டர் நிர்வாகங்கள், இந்தி, தெலுங்கில் சுத்தமாக பிளாப் – லியோவிடம் தோற்றதா தி கோட்?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் தி கோட். கடந்த வாரத்தில் 5ம் தேதி வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தி கோட் படம் ரிலீஸ் ஆகி 9 நாட்கள் ஆகிறது. முதல் நாளில் 128 கோடி ரூபாய் வசூலித்த விஜய் படம் தொடர்ந்து 8 நாட்களில் இதுவரை 355 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 500 கோடி ரூபாய் தாண்டுவது என்பதே இப்போது பெரும்பாடாக இருந்து வருகிறது. இதற்கிடையே இந்த படத்தின் ஓ டி டி உரிமம் 120 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் 90 கோடிக்கு விற்றுள்ளதால் இந்த படத்தை 386 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது. அதனால் இந்த படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்த லியோ படம் 650 கோடி ரூபாய் வரை வசூலித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நரபலி, இரட்டை பிறவி போன்ற மூடநம்பிக்கை விஷயங்களால் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டது.

அதுவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்ற ஒரு தரமான இயக்குனர் 2023 ம் ஆண்டில் இப்படி பத்தாம் பசலித்தனமான மூடக்கு நம்பிக்கை நிறைந்த இரட்டைப்பிறவி, நரபலி போன்ற விஷயங்களை முன்னிறுத்தி லியோ படத்தை எடுத்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை, வருத்தத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து மிகவும் மோசமான, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

எனினும் இத்தகைய மோசமான விமர்சனங்களையும் தாண்டி லியோ படம் 650 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக இருந்த லியோ படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படம் என்று பெயர் பெற்றது. ஆனால் தி கோட் படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பாதிக்காத நிலையிலும் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில் இதுவரை 355 கோடி மட்டுமே வசூலித்து பின் தங்கியுள்ளது.

தி கோட் படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில், பல தியேட்டர்களில் காற்று வாங்குகிறது. இதனால் தியேட்டர் நிர்வாகங்கள்ஏமாற்றத்தில் உள்ளன. அது மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தியில் தி கோட் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த படம் தெலுங்கில் 13 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது ஹிந்தியில் ஓடிடி பிரச்சனை காரணமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகாதால் அங்கும் மிகப்பெரிய பிளாப் ஆகியுள்ளது. அதனால் தி கோட் படம், லியோ படத்திடம் தோற்றுவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

சற்று முன்