- Advertisement -
Homeபொழுதுபோக்குமெட்ராஸுல போடப் போறாங்க குண்டு... அதுல தப்பிச்ச 10 பேரு கடல்ல மாட்டிக்கிட்டாங்க.... கவனம் ஈர்க்கும்...

மெட்ராஸுல போடப் போறாங்க குண்டு… அதுல தப்பிச்ச 10 பேரு கடல்ல மாட்டிக்கிட்டாங்க…. கவனம் ஈர்க்கும் போட் பட டீசர்… வெற்றி பெறுவாரா சிம்புதேவன்…

- Advertisement -

இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர் சிம்பு தேவன். இவர் தனது முதல் திரைப்படமாக வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசியை எடுக்க, அதனை சங்கரே தயாரித்தார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்தும், அதேசமயம் கச்சிதமான கதையுடனும் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்தப் படத்தில் வடிவேலு நடித்த ஒவ்வொரு காட்சிகளும் திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்தியதால் கொண்டாடப்பட்டார் இயக்குனர் சிம்பு தேவன். ஒரு அரசர் காலத்து கதையை இவ்வளவு எளிமையாக நகைச்சுவை கலந்த பாணியில் யாரும் கூறியிருக்க முடியாது என்ற பாராட்டையும் அவர் பெற்றிருந்தார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அறை எண் 305ல் கடவுள் திரைப்படத்தை எடுத்தார் சிம்பு தேவன்.

- Advertisement -

இரண்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வர, அவர்களது வாழ்வில் கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என்ற சின்ன கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பிற்காலத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் அந்த நேரத்தில் வசூலில் என்னமோ சாதிக்கவில்லை. இதன்பிறகு ராகவா லாரன்ஸை வைத்து இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தை எடுத்தார் சிம்பு தேவன்.

தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு கவ்பாய் கதை களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நகைச்சுவையில் கலக்கியது. கிட்டத்தட்ட பேண்டஸி திரைப்படங்களை எடுப்பதில் தான் ராஜா என்பதை நிரூபித்தார் சிம்பு தேவன். இதன்பிறகு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் திரைப்படத்தை எடுத்த அவர், விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் கலை கவரும் வகையில் எடுக்கப்பட்ட புலி திரைப்படம், மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. மேலும் சமூக வலைதளங்களில் கடும் கிண்டல் கேலிக்கு உள்ளானார் இயக்குனர் சிம்பு தேவன். இதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கசடதபற இன்னும் அந்தாலஜி திரைப்படத்தை எடுத்து மீண்டு வந்த அவர், தற்போது யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து போட் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. பீரியாடிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், போர் காரணமாக மெட்ராஸில் குண்டு போடப்படுவதாகவும், அதிலிருந்து தப்பித்த 10 பேர் ஒரு படகில் நடுக்கடலில் மாட்டிக் கொண்டது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டீசரை மிக விறுவிறுப்பாக இருக்க, ஒரு படகில் நடைபெறுவது தான் ஒட்டுமொத்த கதை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்தத் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்