- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 தக்லைஃப் படங்களின் தோல்வியால் துவண்டு போன விண்வெளி நாயகன் - கமலிடம் இருந்து...

இந்தியன் 2 தக்லைஃப் படங்களின் தோல்வியால் துவண்டு போன விண்வெளி நாயகன் – கமலிடம் இருந்து எஸ்கேப் ஆன 2 இளம் இயக்குனர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் எழுத்தாளர் கதை திரைக்கதை ஆசிரியர் வசனகர்த்தா பாடல் ஆசிரியர் தொழில்நுட்ப கலைஞர் என சகல கலைகளிலும் கமல்ஹாசன் கற்றுத் தேர்ந்தவர். சமீபத்தில் அமெரிக்காவில் 3 மாதங்கள் தங்கி ஏஐ தொழில்நுட்ப பயிற்சியும் பெற்று வந்திருக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் கடந்தாண்டில் வெளியாகி பலத்த தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் பலத்த நஷ்டம் அடைந்தது. அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைப் படம் இம்மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படமும் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கடந்த 1987ம் ஆண்டில் வெளியான நாயகன் படம் போல இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தக்லைஃப் படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. சிம்பு திரிஷா அசோக் செல்வன் அபிராமி நாசர் ஜோஜூ ஜார்ஜ் என பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் ரூ. 50 கோடியை வசூலில் தாண்டவில்லை. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.

தக்லைஃப் படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கிய நடிகர் கமல்ஹாசனுக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷங்கர் மணிரத்னம் போன்ற பெரிய சீனியர் இயக்குனர்களுக்கு தன்னை வைத்து வெற்றிப் படம் கொடுக்க தெரியவில்லை என்று தீர்மானித்த நடிகர் கமல் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

அதன்படி கமல் 237 படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்குகிறார். இது அவர்களது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் இன்னும் 2 இளம் இயக்குனர்களிடம் தனக்காக கதை பண்ணும்படி நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். அவர்கள் சமீபத்தில் சூப்பர் ஹிட் படங்களை தந்த இளம் இயக்குனர்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்தியன் 2 தக்லைஃப் என 2 தோல்வி படங்களை தந்த கமல்ஹாசனுடன் இணைந்தால், நமக்கும் தோல்விதான் ஏற்படும் என்று சென்டிமென்ட் ஆக கருதிய அந்த இளம் இயக்குனர்கள், நீங்கள் நடிப்பது போன்ற மெச்சூரிட்டியான கதைகள் எங்களிடம் இப்போது இல்லை. காதல் கதைகள் தான் இருக்கிறது என்று சொல்லி கமலிடம் இருந்து தப்பித்திருக்கின்றனர். இதைக்கேட்டு விண்வெளி நாயகன் செம அப்செட்டில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்