- Advertisement -
Homeபொழுதுபோக்குசாலையில் சறுக்கி விழுந்த மஞ்சள் வீரன்... சர்வீஸ் சாலையில் ஸ்டண்ட் செய்யும் போது மண்ணை கவ்விய...

சாலையில் சறுக்கி விழுந்த மஞ்சள் வீரன்… சர்வீஸ் சாலையில் ஸ்டண்ட் செய்யும் போது மண்ணை கவ்விய டிடிஎஃப் வாசன்… இப்போது எந்த நிலையில் இருக்கிறார் தெரியுமா…

- Advertisement -

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான டிடிஎஃப் வாசன், பிரபல யு டியூபராக வலம் வருகிறார். 2k கிட்ஸ்களுக்கு மட்டும் பரிட்சயமான அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆனார்.

கொரோனா கட்டுப்பாடுகள் இருந்திருந்த அந்த சமயத்தில், விடுதி வளாகத்தில் தனது நண்பர்கள் படையுடன் அவர் செல்ல, ஏராளமான இளைஞர்கள் கூடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, பலரும் டிடிஎஃப் வாசம் பற்றியே பேசி வந்தனர். இப்படி ஒரு சாதாரண இளைஞருக்கு இவ்வளவு பெரிய கூட்டமா என்று பலரும் கேள்வி எழுப்ப, அப்போதுதான் அவர் யூடியூப்ல் என்ன செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியவந்தது.

- Advertisement -

தனது பைக்கினை கொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் பயணம் செய்யும் டிடிஎஃப் வாசன், அதனை வீடியோவாக எடுத்து புகழ்பெற்றார். இதற்கென தனி ரசிகர்கள் அவரை சூழ, குறுகிய காலத்தில் டிடிஎஃப் வாசன் பலராலும் பேசப்பட்டார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் டிடிஎஃப் வாசன் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. தனது பைக் ரேடியில் சரியான விதிமுறைகளை அவர் பின்பற்றுவது இல்லை என்றும், அதிவேகத்தில் பயணம் செய்து இளைஞர்களுக்கு மோசமான ஒரு முன்னுதாரமாக இருப்பதாகவும் பலர் கூறினர். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த இளைஞர், தொடர்ந்து பைக் ரைடில் செல்வது போல வீடியோ வெளியிட்டு அதன் மூலம் வருமானம் தேடி வந்தார்.

- Advertisement -

இப்படி சர்ச்சைக்கு பேர் போன வாசல், சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிப்பதாக அறிவித்தார். இதனை திருவிக பூங்கா எனும் படத்தை எடுத்த செல் அம் இயக்குகிறார். இந்தப் படத்தில் வாசனுக்கு ஜோடியாக இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா சாஜி நடிப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் பேட்டி அளித்த இதன் இயக்குனர் அடுத்த சூப்பர் ஸ்டார் டிடிஎஃப் வாசன் தான் என்று கூறினார்.

இந்த நிலையில், பெங்களூரு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற டிடிஎஃப் வாசல், காஞ்சிபுரத்தை அடுத்த பாலு செட்டி சத்திரத்தின் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் செல்லும் போது, ஸ்டண்ட் செய்து கீழே விழுந்தார். 240 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் சென்று கீழே விழுந்த நிலையில், பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து இருந்ததால் உயிர் பிழைத்தார். அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விபத்துக்குள்ளான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அதைப் பார்த்த பலரும் டிடிஎஃப் வாசனை வறுத்தெடுத்து வருகின்றனர். இவரின் சாகசத்தால், சாலையில் செல்லும் சாமானியர் பாதிக்கப்பட்டால் என்ன ஆவது என்று கேள்வி எழுப்பும் அவர்கள், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதி வேகமாக பைக் ஒட்டியதால் டிடிஎஃப் வாசல் மீது பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்