- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது சூர்யாவின் 45வது திரைப்படத்தில் இத்தனை பேர் நடிக்கிறார்களா... ஆச்சரியப்படுத்தும் ஆர்ஜே பாலாஜி... அப்போ ரசிகர்களுக்கு...

என்னது சூர்யாவின் 45வது திரைப்படத்தில் இத்தனை பேர் நடிக்கிறார்களா… ஆச்சரியப்படுத்தும் ஆர்ஜே பாலாஜி… அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான் போல…

- Advertisement -

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான கங்குவா திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. பிரம்மாண்டமான முறையில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வசூலித்தது என்னவோ வெறும் 80 கோடி ரூபாய் மட்டும். இதனால் நடிகர் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

 

- Advertisement -

இதன் நடுவே சூர்யாவின் 44 ஆவது திரைப்படத்திற்கான சூட்டிங் முடிவு அடைந்திருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே இதற்கு முன்னதாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கொடுத்து அசத்தியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

 

- Advertisement -

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

 

அடுத்த ஆண்டு மே மாதம் இதனை திரைக்கு கொண்டுவர கார்த்திக் சுப்பராஜ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு கல்ட் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜியுடன் கை கோர்த்து இருக்கிறார் சூர்யா.

 

இது ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகிறது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இதனை படமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அண்மையில் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் இதற்கான பட பூஜை நடைபெற்றது. திரிஷா இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிப்பது நம் அனைவருக்கும் தெரியும்.

 

இந்த நிலையில் லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்வாசிகா, சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார். இதுபோக, மலையாளத்தில் வெளியான ஹோம் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பால் புகழ்பெற்ற இந்திரன்ஸ்-ம் நடிக்க இருக்கிறார். ஆர் ஜே பாலாஜி அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களை படத்தில் இறக்குவது அதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்