- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரையரங்குகளில் மின்னுமா துருவ நட்சத்திரம்... இன்னும் முன்பதிவு ஆரம்பமாகாததால் குழப்பத்தில் விக்ரம் ரசிகர்கள்...

திரையரங்குகளில் மின்னுமா துருவ நட்சத்திரம்… இன்னும் முன்பதிவு ஆரம்பமாகாததால் குழப்பத்தில் விக்ரம் ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் விக்ரமுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வெளியாகி வந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. தெய்வத்திருமகள் திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு எந்த ஒரு படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறலாம். நடுவில் ஐ திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தாலும், அது எதிர்பார்த்த லெவலை பூர்த்தி செய்யவில்லை.

இது மட்டுமல்லாமல், பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், சாமி ஸ்கொயர், ஸ்கெட்ச், கோப்ரா என அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை குவிக்க தவறின. இப்படியான நேரத்தில் தான் கௌதம் மேனன் உடன் இணைந்தார் விக்ரம்.

- Advertisement -

ஏற்கனவே சூர்யாவுக்கு போயிருந்த துருவ நட்சத்திரம் கடைசி நேரத்தில் கை கூடாமல் போனது. இதனால், விக்ரம் இந்த திரைப்படத்திற்குள் நுழைய 2018 ஆம் ஆண்டில் இதற்கான சூட்டிங் தொடங்கியது. இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. விமானத்திலிருந்து கோட் சூட்டுடன் விக்ரம் களமிறங்கும் காட்சி அனைவரையும் கவர்ந்திழுக்க அவர் ஜான் எனும் நபர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதில் விக்ரமுடன் ஜெயிலர் பட வில்லன் விநாயகன், ரித்து வர்மா, ராதிகா திவ்யதர்ஷினி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்தனர். சூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற, பொருளாதார சிக்கலால் துருவ நட்சத்திரம் முடங்கியது. இந்த திரைப்படத்தை தயாரிக்கவும் செய்ததால் கடனுக்கு தள்ளப்பட்டார் கௌதம் மேனன். அதிலிருந்து மீள்வதற்காக அவர் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க விக்ரமும் தனது அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பொன்னியின் செல்வனின் நடித்து முடித்து, தற்போது பா ரஞ்சித்துடன் தங்கலானில் இணைந்திருக்கிறார். இதற்கான சூட்டிங் இப்போது முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி தங்கலான் திரைப்படம் வெளியாகிறது.

இதனிடையே துருவ நட்சத்திரத்திற்கான பொருளாதார பிரச்சனையை சிரமப்பட்டு முடித்தார் கௌதம் மேனன். இதற்கான சாட்டிலைட் உரிமையும் விலை போகாமல் இருந்த நிலையில், கடைசியாக கலைஞர் டிவி வாங்கியது. வரும் 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. இது குறித்த ஒரு தெளிவு கிடைக்காததால் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாமலேயே உள்ளது. இதனால் சோகத்தில் மூழ்கி இருக்கும் விக்ரம் ரசிகர்கள், படம் ரிலீஸ் ஆகுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்