- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக தலைமையில் புதிய அமைச்சரவை - வெளிப்படையாக விமர்சனம் செய்த இயக்குனர் பா ரஞ்சித்!

தவெக தலைமையில் புதிய அமைச்சரவை – வெளிப்படையாக விமர்சனம் செய்த இயக்குனர் பா ரஞ்சித்!

- Advertisement -

கடந்த 60 ஆண்டுகளாக அதிமுக – திமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்த நிலையில் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்திருக்கிறது. தமிழகத்தின் 12 வது முதலமைச்சராக கடந்த 10ம் தேதி நடிகர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில் தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்வி அர்லேகர் தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று மீண்டும் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பது முக்கியமான மாற்றம் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றிக்கழக அரசின் இரண்டாம் கட்ட 3ம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது.

இதில் 4 பெண்கள் அமைச்சராக பதவியேற்றுள்ளனர். மேலும் முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை என தெரிய வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது இஸ்லாமியருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்கள் ஆகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இது ஒரு முக்கியமான தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரநிதித்துவம் என்பது முதல் நிலை. கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும் சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.

இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளம் இடும்போது அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் நீலம் பண்பாட்டு மையம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது என்று இயக்குனர் பா ரஞ்சித் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்