- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமான நிலைய கழிவறையிலும் அப்டேட் கேட்டார்கள்... லியோ பட வெற்றி விழாவில் கலகலப்பூட்டிய இயக்குனர் மிஷ்கின்...

விமான நிலைய கழிவறையிலும் அப்டேட் கேட்டார்கள்… லியோ பட வெற்றி விழாவில் கலகலப்பூட்டிய இயக்குனர் மிஷ்கின்…

- Advertisement -

தளபதி விஜயின் லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாயை லியோ ஈட்டியதாக அதன் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்தார்.

படத்தில் இரண்டாம் பாதிதான் சரி இல்லை என்று பலரும் கூறி வந்தனர். குறிப்பாக, அந்த நரபலி காட்சியை தவிர்த்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இது குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் மன்சூர் அலிகானின் பார்வையில் கூறுவதாகவும், அது பொய்யாக கூட இருக்கலாம் என்று கூறி குண்டைத் தூக்கிப் போட்டார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, “என்ன ஒரு அழகான மேடை இது. ஒரு மாதத்திற்கு முன்பு நான் விமான நிலையத்தில் கழிவறைக்கு சென்றேன். அங்கேயும் இளைஞர் ஒருவர் என்னிடம் லியோ அப்டேட் கேட்டார். ஸ்வீடன் நாட்டிற்கும் நான் செல்லும்போது இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. இங்கு இரண்டு லெஜன்ட்கள் இருக்கிறார்கள். அது புரூஸ்லீயும், மைக்கேல் ஜாக்சனும் தான். ஆனால் நான் கண்ணால் பார்த்த லெஜன்ட் விஜய்தான்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு சிலர் சாவு போஸ்டர் அடிச்சாங்க. விஜய் ரசிகர்கள் அப்படி பண்ணி இருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். நீங்கள் எப்போதும் விஜய்யுடன் இருக்கும்போது எப்படி மரணம் அடைவீர்கள். நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். சினிமாவிலும் சரி, ரியல் வாழ்க்கையிலும் சரி விஜய் தான் ஹீரோ.

- Advertisement -

25 வருடமாக ஒருவர் விஜய்யையே ரசிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு பெரிய தன்மையான மனிதராக இருப்பார்” என்று பேசி முடித்தார். இதைத் தொடர்ந்து தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, மிஷ்கினிடம் சில கேள்விகள் எழுப்ப அதற்கு உடனடியாக பதில் கொடுத்தார். எந்த கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு, ஜேம்ஸ் பாண்ட் ரக படத்தில் தான் விஜய் நடிக்க வேண்டும் என அவர் பதில் அளித்தார்.

விஜய்க்காக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று மறுபடியும் டிடி கேள்வி எழுப்ப, எனது இதயத்தை வெட்டி எடுத்து, அதனை விஜய்க்கு கொடுப்பேன் என்று கூறி நெகிழ வைத்தார். அதுமட்டுமில்லாமல் இறுதியாக ஆல்தோட்ட பூபதி பாடலையும் மிஷ்கின் பாடி அசத்தினார். அவரின் செயலால் அரங்கமே கலகலப்பாக மாறியது.

- Advertisement -

சற்று முன்