- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கீட்டு, இப்படியா கண்டிஷன் போடுவாங்க, லேடி சூப்பர் ஸ்டார் மீது...

12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கீட்டு, இப்படியா கண்டிஷன் போடுவாங்க, லேடி சூப்பர் ஸ்டார் மீது அதிகரித்து வரும் விமர்சனம் – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அன்னபூரணி. இது அவருடைய 75வது படம். மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அன்னபூரணி, பிளாப் படமாக போனது. அதுமட்டுமின்றி நிறைய சர்ச்சகைளிலும் அந்த படம் சிக்கியது.

இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான கவினுடன் ஒரு படத்தில் நடிக்கவும் அவர் கமிட் ஆகி இருக்கிறார். இதுதவிர இந்தி படம் ஒன்றிலும் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்போது தாய்லாந்து சென்றுள்ள நயன்தாரா, தனது குடும்ப புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

நடிகை நயன்தாரா, நடிக்க வந்த துவக்கத்தில் அறிமுக நாயகியாக இருந்த போது சில லட்சங்களில்தான் அவரது சம்பளம் இருந்தது. குறிப்பாக ஐயா, சந்திரமுகி, வல்லவன், வில்லு போன்ற படங்களில் நடித்த போது, அவரது சம்பளம் கோடி ரூபாயை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அறம், மாயா, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்த பிறகு நயன்தாரா சம்பளம் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இப்போது ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா பெறுகிற சம்பளம் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை இருக்கிறது. படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கை பொறுத்து 2 கோடி ரூபாய் குறையவோ, கூடவோ செய்கிறது.

- Advertisement -

அதே நேரத்தில், படத்தில் நடிக்க கால்ஷீட் தரும்போதே நயன்தாரா தரப்பில் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காலை 11 மணிக்கு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவேன். மாலை 5 மணிக்கு கிளம்பி விடுவேன். அதற்கு மேல் தாமதம் செய்யக் கூடாது. அதாவது 6 மணி நேரம் மட்டுமே கேமரா முன்பு நிற்க அவர் இயக்குனருக்கு அனுமதி தருகிறார்.

அதுமட்டுமின்றி ஷூட்டிங் நடக்கிற இடம் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அதையும் கடந்த அதிக தூரம் என்றால், நிச்சயம் ஷூட்டிங் வரமாட்டேன் என்றும் கண்டிஷன்களை கூறுகிறார். இதனால் நயன்தாராவை படத்தில் நடிக்க வைக்கவே, இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் யோசிக்க வேண்டிய நிலையை நயன்தாராவே ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சற்று முன்