- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருக்கி அஜர்பைஜான் நாடுகளில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க கூடாது - மத்திய அரசுக்கு திரைப்பட...

துருக்கி அஜர்பைஜான் நாடுகளில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க கூடாது – மத்திய அரசுக்கு திரைப்பட தொழிலாளர் அமைப்பு கடிதம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன. குறிப்பாக சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் படமாக்கப்படுகின்றன. வெளிநாடுகளை பொருத்த வரை விமான போக்குவரத்து செலவுதான் அதிகரிக்குமே தவிர, அங்கு ஷூட்டிங் பகுதிகளாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு கட்டணம் குறைவுதான்.

அத்துடன் தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு கன்னடம் இந்தி மொழி சார்ந்த நடிகர்கள் நடிகைகள் வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது ரசிகர்கள் தொந்தரவு பெரும்பாலும் இருக்காது. அதனால் அவர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக ஷாப்பிங் செல்ல முடிகிறது. சாதாரண மக்களை போல அவர்கள் அங்கு உலா வர முடியும் என்பதால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்றால் நடிகர் நடிகைகளும் உற்சாகமாகி விடுகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பகல்ஹாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து செந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதனால் எல்லைப் பகுதிகளில் இன்னும் போர் பதற்றம் குறையவில்லை.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனை கண்டிக்கும் விதமாக அந்நாடுகளுக்கு இந்திய திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்றும் இங்கு பணி புரியும் அந்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்களின் விசாக்களை ரத்து செய்யவும் அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களின் முக்கியமான காட்சிகள் சண்டைக் காட்சிகள் பாடல் காட்சிகள் துருக்கியில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படமும் அஜர்பைஜானில் முழுமையாக படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சியாம்லால் குப்தா கூறியதாவது, இந்திய திரைப்படங்களை துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளில் படமாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அந்த நாடுகளை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய சினிமாவில் பணிபுரிந்தால் அவர்களின் விசாக்களை ரத்து செய்ய வேண்டும். இந்த விஷயம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் கடிதம் எழுத இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்