- Advertisement -
பாஸ் என்கிற பாஸ்கரன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படங்களை தொடர்ந்து நடிகர்கள் ஆர்யா சந்தானம் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். ஆனால் இவர் ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இல்லை. இவர் புதிதாக சினிமா களத்துக்குள் வந்த புதிய நெல்சன். இயக்குனர் திருவிடம் அசோசியேட் டைரக்டராக இருந்த நெல்சன் ஆர்யா சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. மேலும் நெல்சன் வெங்கடேசன் என்ற ஒரு இயக்குனரும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் ஒரு நாள் கூத்து மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





