- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்துக்கு அதிகரித்த எதிர்மறை விமர்சனங்கள், படக்குழு எடுத்த அதிரடி முடிவு - இனியாவது ரசிகர்கள்...

கங்குவா படத்துக்கு அதிகரித்த எதிர்மறை விமர்சனங்கள், படக்குழு எடுத்த அதிரடி முடிவு – இனியாவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு தைரியமாக வருவார்களா?

- Advertisement -

கடந்த 14ம் தேதி சூர்யா நடிப்பில் கங்குவா படம் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே கடுமையான நெகடிங் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

குறிப்பாக படத்தில் உள்ள அதிகப்படியான இரைச்சல், கதாபாத்திரங்களின் கூச்சல், கதை திரைக்கதையில் தெளிவில்லாத குழப்பம் என பல காரணங்களால் இந்த படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 4 நாட்களில் கங்குவா படம் ரூ. 127 கோடி உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தை 40 நிமிடங்கள் மட்டுமே பிஸினஸ் கட் படமாக பார்த்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர், படத்தை முழுமையாக பார்க்காமல் தவறுதலாக பெரிய அளவில் பில்டப் கொடுத்து பேசிவிட்டதாக இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது உண்மையா, உருட்டா எனத் தெரியவில்லை.

எனினும் படத்தை பற்றி விமர்சிக்கும் பலரும் படம் குறித்து சொல்லும் முக்கிய குறையே படத்தில் உள்ள இரைச்சலும், அதிகப்படியான சத்தமும்தான். 3 மணி நேரம், ஹெவி டிராபிக் நடுவில் மாட்டிக்கொண்ட அவஸ்தையில்தான் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் நிலைக்கு ரசிகர்கள் ஆளாகி வருகின்றனர்.

- Advertisement -

இதையடுத்து கங்குவா படக்குழு தரப்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தின் ஆரம்பத்தில் வரும் 30 நிமிட காட்சிகளை பலரும் விமர்சிப்பதால், அதில் 20 நிமிட காட்சிகளை குறைத்து விட்டு 10 நிமிடங்கள் மட்டுமே வருவமாறு மாற்றுகின்றனர். அத்துடன் படத்தில் பல இடங்களில் உள்ள இரைச்சலான சத்தங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வேறு இசைக்கோர்வையை சேர்க்க உள்ளனர்.

கங்குவா படத்தில் ஆரம்பத்தில் வரும் 20 நிமிடம் காட்சிகள் குறைப்பு, இசையில், இரைச்சலாக உள்ள பகுதிகளில் மாற்றங்களை செய்து, கங்குவா படத்தை மீண்டும் ரீ சென்சார் செய்து இன்று அல்லது நாளைக்குள் புதிய திருத்தியமைக்கப்பட்ட படமாக கங்குவா தியேட்டரில் ஓடும். அதனால் பழைய விமர்சனங்களை மறந்துவிட்டு, ரசிகர்கள் தைரியமாக கங்குவா படம் பார்க்க வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்