- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னை 22வது சர்வதேச திரைப்பட விழா; சிறந்த கலைஞர்களாக விருதுகளை அள்ளிய நடிகர், நடிகைகள் -...

சென்னை 22வது சர்வதேச திரைப்பட விழா; சிறந்த கலைஞர்களாக விருதுகளை அள்ளிய நடிகர், நடிகைகள் – சிறந்த நடிகர், நடிகை இவர்களா?

- Advertisement -

சினிமா துறை சார்ந்த கலைஞர்களுக்கு அவர்களுக்கு திறமையை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாவில் நடிகர் கமல் 3 முறை சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருக்கிறார். அதே போல் ஏஆர் ரகுமான் 7 முறை சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது பெற்றிருக்கிறார். மேலும் ஆஸ்கர் விருதையும் ஏஆர் ரகுமான் வென்றவர் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் நிதியுதவி உடன் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகம் சார்பில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் இந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

- Advertisement -

பிவிஆர் ராயப்பேட்டை பிவிஆர் மைலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் இந்த திரைப்பட விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களும் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

சென்னை 22வது சர்வதேச திரைப்பட நிறைவு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே பாக்யராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்று, இந்த விழாவில் நட்சத்திரங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

- Advertisement -

இதில் சிறந்த நடிகருக்கான விருது மகாராஜா படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது. மக்களுக்கு பிடித்த நடிகர் என்ற பிரிவில் சிறந்த நடிகர் விருது அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டது.

வேட்டையன் படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. மேலும் ரப்பர் பந்து படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை நடிகர் தினேஷ் வென்றார். அதேபோல் வாழை படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பொன்வேல் பெற்றார். சிறந்த துணை திரைப்படம் விருதை லப்பர் பந்து வென்றது. அதன் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அந்த விருதை பெற்றுக்கொண்டார்.

- Advertisement -

சற்று முன்