- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் இருந்து சுடச்சுட வெளியான 3 சூப்பர் அப்டேட் - தளபதி வேற லெவல்ல...

ஜனநாயகன் படத்தில் இருந்து சுடச்சுட வெளியான 3 சூப்பர் அப்டேட் – தளபதி வேற லெவல்ல கலக்கறாருப்பா… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் ஒருபுறம் அனல் பரப்பிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் மதுரையில் நடந்த தவெக கட்சியின் 2வது மாநில மாநாட்டில் தீயாக பேசிய நடிகர் விஜய் பேச்சு இன்னும் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. விஜய் பேச்சை பற்றி அக்கு வேறாக ஆணிவேராக அரசியல் விமர்சகர்கள் பிரித்து மேய்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக திமுக குறித்தும் ஸ்டாலின் குறித்தும் விஜய் பேசிய பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அதிலும் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று விஜய் பேசியதுதான் இதில் ஹைலைட்டாக உள்ளது. தளபதியார் என்றும் அப்பா என்றும் அழைக்கப்படுவதாக பெருமைப்பட்ட அவருக்கு விஜயின் அங்கிள் என்ற அழைப்பு பெரிய சங்கடத்தை உண்டுபண்ணி விட்டது.

- Advertisement -

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து வந்த விஜய்க்கு அருகில் ஓடிவந்த அஜய் என்பவரை பவுன்சர் ஒருவர் பிடித்து தூக்கிப் போட்ட விஷயமும் இணையத்தில் வைரலாகி, விஜய் உள்ளிட்ட 10 பவுன்சர்கள் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் ஸ்டேஷனில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் உண்மையில் பவுன்சர் தூக்கிப் போட்ட அஜய் என்ற வாலிபர் புகார் கொடுக்கவில்லை. திமுக விசுவாசியாக சரத்குமார் என்பவர்தான் இந்த புகாரை தந்திருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள ஜனநாயகன் படம் குறித்த 3 சூப்பர் அப்டேட்டுகள் இப்போது சுடச்சுட வெளியாகி தளபதி ரசிகர்களை தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

விஜய் இதுவரை அவரது படங்களில் ஆடிய நடனங்களில் அரபிக்குத்து, ரஞ்சிதமே பாடல் டான்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை. அதே போல் ஜனநாயகன் படத்திலும் தளபதி தளபதி கச்சேரி தளபதி என்ற அந்த பாடலில் நடனத்தில் விஜய் பிச்சி உதறியிருக்கிறார். அவரது அட்டகாசமான நடனத்தை பார்த்து உடன் ஆடிய நடனக் கலைஞர்களே அப்படியே அசந்து போய் ஆட மறந்து நின்றுவிட்டார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் ஒரு காட்சியில் நடிகர் நம்பியாரை சவுக்கால் வெளுக்கும் எம்ஜிஆர், நான் ஆணையிட்டால் என்ற பாடலை பாடுவார். அதே பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு ஜனநாயகன் படத்தில் விஜய் பாடுவது போன்ற காட்சி வருகிறது. அத்துடன் பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் குறித்தும் விஜய் பாடம் நடத்துவது போலவும் ஒரு காட்சி ஜனநாயகன் படத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்