நடிகர் கார்த்தியின் 25வது படம் ஜப்பான். ஜோக்கர், கூக்கூ படங்களை தந்த ராஜூ முருகன் படம் என்பதால் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், படம் வெளியான பிறகு படம் பார்க்க சென்ற ரசிகர்கள், அப்படியே எழுந்து ஓடிவிடலாமா, என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு வேற லெவலில்தான் இருந்துள்ளது. இடைவேளையோடு வந்த ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்த சூழலில் பருத்திவீரன் தயாரிப்பு பிரச்னையில் ஞானவேல்ராஜா, அமீரை தரக்குறைவாக பேசிய விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. இதில் தன்னை முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக காட்டிய இயக்குநர் அமீருக்கு நன்றியுடையவராக கார்த்தி நடந்துக்கொள்ளவில்லை என பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஜப்பான் பட தோல்வியுடன் இதுவும் சேர்ந்துக்கொண்டது.
இந்நிலையில், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் இப்போது பிஸியாக நடித்துவரும் கமல்ஹாசன் அடுத்து சட்டசபை தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். அதற்கு பின், புரொஜெக்ட் கே ( கல்கி) என்ற பான் இந்தியா படத்திலும், இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இதனால் எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருந்த படம் தள்ளி போடப்பட்டு விட்டது. 2025ம் ஆண்டின் மத்தியிலோ அல்லது அந்த ஆண்டின் இறுதியிலோ நம் படத்தை ஆரம்பிக்கலாம் என்று கமல் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் பலத்த ஏமாற்றத்தில் உள்ள இயக்குநர் எச். வினோத், அதற்குள் நான் தனுஷ் அல்லது வேறு நடிகர்கள் யாராவது படத்தை இயக்கிவிட்டு வந்துவிடுகிறேன் என, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேசி ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளார்.
ஜப்பான் பட தோல்வியால் நலன்குமாரசாமியின் வாவா ( வா வாத்தியாரே) படத்திலும், 96 பட இயக்குநர் பிரேம் படத்திலும் நடித்துவரும் கார்த்தி, இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுமா என்று தெரியவில்லை. ஜப்பான் படம் தோல்வியும், அமீர் விவகாரமும் தன் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ள நிலையில், உத்தரவாதமான ஒரு பெரிய வெற்றிப்படத்தை உடனடியாக தந்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளார்.
இப்போது அதற்கு ஏற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் 2 என்ற படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்ற, பேசப்பட்ட படமாக கார்த்திக்கு இருந்தது. எச். வினோத்துக்கு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது. இப்போது கமல் வைத்து இயக்கும் படமும் தள்ளிப் போனதால் எச். வினோத்தும் அந்த தீரன் அதிகாரம் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். எனவே, கார்த்தி, எச் வினோத் இதுகுறித்து விரைவில் கலந்து பேசி அந்த படத்தின் 2ம் பாகம் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிய வந்துள்ளது.





