- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் பட இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் குறித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாலிவுட்...

தமிழ் பட இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் குறித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான் – இனியாவது அவர்கள் திருந்துவார்களா?

- Advertisement -

இயக்குர் அமீர்கான், இந்தி படவுலகில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக முன்னணியில் இருக்கிறார். பல முக்கிய வெற்றிப்படங்களில் அமீர்கான் நடித்திருக்கிறார். லகான், ரங் தே பசந்தி, பிகே போன்ற ஹிட் படங்களில் நடித்தவர். தமிழில் லகான் படம் தங்கான் என்ற பெயரில் வெளியாகி, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அமீர்கான் அம்மாவுக்கு உடல்நலம் இல்லாததால், சில மாதங்களாக சென்னையில் தன் அம்மாவுடன் தங்கியுள்ளார் அமீர்கான். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவரது அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சிக்கிக்கொண்ட அமீர்கான், விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டார். அதையடுத்து 2 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டது நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் நடிகர் அஜீத்குமார் முன்வந்து உதவியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக முக்கிய இயக்குநராக பார்க்கப்படுகிறார். மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ படங்களை இயக்கிய அவர், அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்க உள்ளார். அதற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அதே போல் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீபன் இயக்கிய ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினிக்கு இது மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படம் எடுக்கப்பட உள்ளது. எப்பொழுதும் தனது படத்தின் 2ம் பாகத்துக்கு சம்மதிக்காத ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ், நெல்சன் இயக்கிய படங்களை பொருத்த வரை அவர்கள் படங்களின் மிகப்பெரிய விஷயமே வன்முறை சம்பவங்கள்தான். படம் முழுக்க ரத்தம், கத்தி, துப்பாக்கி சத்தம் என ஹீரோயிசம் மட்டுமே இவர்களது படங்களாக இருந்து வருகிறது. இதை குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ஒரு தரப்பு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சினிமா விமர்சகர்களும் இதை சுட்டிக்காட்டியே வருகின்றனர். சமீபத்தில் வெளிவந்துள்ள அனிமல் படத்திலும் வன்முறை, ஆபாசமே பிரதானமாக உள்ளதும் கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து பாலிவுட் நடிகர் அமீர்கானும் தனது நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அவர் கூறுகையில், இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா போன்ற இயக்குநர்களுக்கு மேக்கிங் தெரியவில்லை. வன்முறை காட்சிகளும், செக்ஸ் காட்சிகளும் மட்டும்தான் படமா, கதையே இல்லாமல் எப்படி இவர்கள் படம் எடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை என கோபமாக அமீர்கான் பேசியுள்ளார். அவரது இந்த விமர்சனம் இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்