- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடப்பாவிகளா இதுக்குதான் அந்த பாடல்ல ரம்பா முக்காடு போட்டு வந்தாங்களா... நினைத்தேன் வந்தாய் படத்தின் சீக்ரெட்டை...

அடப்பாவிகளா இதுக்குதான் அந்த பாடல்ல ரம்பா முக்காடு போட்டு வந்தாங்களா… நினைத்தேன் வந்தாய் படத்தின் சீக்ரெட்டை ஓபன் செய்த இயக்குனர்…

- Advertisement -

இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்க்கு ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவரது தந்தையின் இயக்கத்தில் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியிலேயே முடிந்தன. அந்த நேரத்தில் விஜய்யை ஒரு நடிகராக தூக்கி விட்டது பூவே உனக்காக திரைப்படம்தான். விக்ரமன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பிறகு பாசில் இயக்கத்தில் எடுக்கப்பட்ட காதலுக்கு மரியாதை திரைப்படமும் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அடுத்ததாக துள்ளாத மனமும் துள்ளும் படமும் வெளியாகி டாப் கியருக்கு சென்றார் விஜய். தொடர்ந்து வெளியான காதல் திரைப்படங்கள் அனைத்தும் விஜய்க்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன.

- Advertisement -

இந்த சமயத்தில் செல்வபாரதி இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படம் வணிகரீதியாக வெற்றியை பெற்றது. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த செல்வ பாரதிக்கு, விஜய் உடன் இணைந்து எடுத்த நினைத்தேன் வந்தாய்தான் முதல் திரைப்படம்.

இதில் கோகுல் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். ரம்பா, தேவயானி ஆகியோரும் நடிக்க, முக்கோண காதல் களத்தில் உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம், விஜய்க்கு மற்றொரு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு செல்வ பாரதி மீண்டும் விஜய்யை வைத்து பிரியமானவளே படத்தை இயக்கினார். அந்த சமயத்திலேயே திருமண ஒப்பந்தத்தை குறித்து பிரியமானவளே திரைப்படம் பேசியிருக்கும்.

- Advertisement -

சிம்ரன் கதாநாயகியாக நடித்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து வசீகரா படத்தை எடுத்தார் செல்வ பாரதி. இந்தத் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றதுடன் வசூலிலும் அந்த அளவு பெரிய சாதனையை படைக்கவில்லை. இந்நிலையில் நினைத்தேன் வந்தாய் திரைப்படம் குறித்து, செல்வ பாரதி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். முக்கியமாக படத்தின் முதல் பாடலான வண்ண நிலவே குறித்து அவர் பேசியிருக்கிறார்.

படத்தில் ரம்பா உடனான காட்சிகள் பெரும்பாலானவை முடிந்துவிட்டன. அந்த சமயத்தில் படக்குழு உடன் ஏற்பட்ட பிரச்சனையால் ரம்பா தெலுங்கு படத்திற்கு சென்று விட்டார். ஆனால் இங்கு நான் வண்ண நிலவே பாடலை எடுத்து முடிக்கவில்லை. அதில் வெறும் 40% மட்டும் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வதென்றும் புரியவில்லை ரம்பாவை அழைக்கவும் மனமில்லை. இதனால் நடனமாடும் ஒரு பெண்ணை அழைத்து, அவரது முகத்தை மறைத்துத்தான் அந்த பாடல் முழுவதையும் எடுத்தோம். அந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் வருவது ரம்பாவே அல்ல என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்