- Advertisement -
Homeபொழுதுபோக்குபருத்திவீரன் பஞ்சாயத்தில் திடீரென அந்த முடிவுக்கு வந்த சிவக்குமார் குடும்பம், இதில் தயாரிப்பாளர் ஒருவர் களமிறங்கி...

பருத்திவீரன் பஞ்சாயத்தில் திடீரென அந்த முடிவுக்கு வந்த சிவக்குமார் குடும்பம், இதில் தயாரிப்பாளர் ஒருவர் களமிறங்கி பார்த்த உள்ளடி வேலை – என்னதாம்பா நடக்குது?

- Advertisement -

பருத்திவீரன் படத்தை இயக்குநர் அமீர் இயக்கி வெற்றி படமாக கொடுத்தார். முதலில் படத்தை தயாரித்த சிவக்குமாரின் உறவினர் ஞானவேல் ராஜா, ஒரு மாத படப்பிடிப்புக்கு பிறகு பணம் இல்லை என ஒதுங்கிக்கொண்டார். அதன்பின் தனது டீம் ஒர்க் புரொடக்சன் ஹவுஸ் மூலம் மொத்த செலவையும் ஏற்று, பலரிடம் கடன் வாங்கி படத்தை முடித்தார் அமீர். படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

தயாரிப்பாளர் சங்கம் மூலம் படத்தை எழுதி வாங்கிக்கொண்ட ஞானவேல் ராஜா, சிவக்குமார் தரப்பு, படப்பிடிப்புக்காக அமீர் செய்த செலவு பணத்தை தராமல் அப்படியே விட்டுவிட்டனர். இதையடுத்து சென்னை கோர்ட்டில் அமீர் வழக்கு தொடர, 17 ஆண்டுகளாக வழக்கு நடந்துவருகிறது. இந்த சூழலில் ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியது, சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

இத்தனை பிரச்னைகள் நடந்த பிற்கும், நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்த பின்பும், இன்னும் பணத்தை தராமல் அமீரை பழிவாங்கும் நோக்கத்தில் சிவக்குமார் குடும்பம் நடந்துக்கொள்வது நியாயமல்ல என தமிழ் சினிமா துறை சார்ந்த பலரும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு, அதே அளவுக்கு மரியாதை தரும் ஒரு பெரிய குடும்பம் சிவக்குமார் குடும்பமாக மதிக்கப்படுகிறது. இப்போது கார்த்தி, சூர்யா இருக்கும் ரேஞ்சுக்கு அமீருக்கு தர வேண்டியது எல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல என்ற நிலையில் ஏன் இப்படி கெட்ட பெயரை அந்த குடும்பமே சம்பாதித்துக்கொள்ள வேண்டும் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இதையடுத்து, அமீருக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை கொடுத்தவிட்டு, இந்த பிரச்னைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வந்துவிட்டனர். ஏனெனில் நியாயம் தெரிந்த அனைவருமே அமீர் பக்கம்தான் நியாயம் உள்ளது. நீங்கள் செய்வது தவறு என சிவக்குமாரிடமே பேசியுள்ளனர். டைரக்டர் பாலா, சூர்யாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பெயரும் இதில் அடிபடுகிறது.

இதற்கிடையே அமீரை பிடிக்காத ஒரு தயாரிப்பாளர் இந்த விஷயத்தில் இறங்கி, இந்த பிரச்னை சுமூகமாக தீர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அமீருக்கு ஆதரவாக பேசியவர்களிடம் சென்று, அமீருக்கு ஆதரவு தராதீர்கள் என்று கூறியிருக்கிறார். இதில் பலரும், அவரை திட்டியே திருப்பி அனுப்பியுள்ளனர். பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு அந்த தயாரிப்பாளர் இந்த உள்ளடி வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. மிக விரைவில் அமீரின் பருத்திவீரன் தயாரிப்பு பஞ்சாயத்து சுமூக முடிவை எட்டிவிடும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்