- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தில் நீடித்து வரும் மிகப்பெரிய மர்மம், மைக் மோகன் விஷயத்தில் என்ன முடிவு செஞ்சாங்க...

கோட் படத்தில் நீடித்து வரும் மிகப்பெரிய மர்மம், மைக் மோகன் விஷயத்தில் என்ன முடிவு செஞ்சாங்க – அந்த கதை பல பேருக்கு இன்னும் தெரியாதோ…?

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். கோட் என சுருக்கமான அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி கோட் ரிலீஸ் செய்யப்படுகிறது.

பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில், நடிகர் மோகன் நடித்திருக்கிறார். மைக் மோகன் என அழைக்கப்படும் மோகன், 1980களில் தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர். பல வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்தவர். கமல், விஜய் போல, அந்த காலகட்டத்தில் முக்கிய முன்னணி நடிகராக இருந்தவர்.

- Advertisement -

நடிகர் மோகனை, கோட் படத்தில் நடிக்க வெங்கட்பிரபு கமிட் செய்த போது, விஜய் என்ற முன்னணி நடிகர் படம் என்பதற்காக அவர் உடனே சம்மதிக்கவில்லை. படத்தின் தனது கேரக்டர், தனக்கான முக்கியத்துவம் குறித்தும், அவர் பேச வேண்டிய வசனங்கள் வரை சீன் பை சீன் என எல்லாவற்றையும் கேட்ட பிறகுதான் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

நடிகர் மோகன் கர்நாடகாவை சேர்ந்தவர். அவரது மனைவி, குடும்பம் குறித்த எந்த விவரங்களையும் இதுவரை அவர் வெளியிட்டதில்லை. சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கே அவரது பின்னணி, குடும்பம் உள்ளிட்ட விவரங்கள் தெரியாது. அந்த அளவுக்கு தன் குடும்ப பின்னணியில் ரகசியமாக வைத்திருப்பவர் நடிகர் மோகன்.

- Advertisement -

இதுவரை மோகன் நடித்த 90 சதவீதம் படங்களில் அவருக்கு பின்னணி குரலாக ஒலித்தவர் பாடகர் மற்றும் நடிகர் விஜயின் தாய் மாமா எஸ்என் சுரேந்தர்தான். அவர்தான் நடிகர் மோகன் படங்களில் அவருக்கு பின்னணி பேசியிருந்தார். ஏனெனில், மோகனுக்கு தாய்மொழி கன்னடம் என்பதால் சரியாக தமிழ் பேச வராது. வசனங்களையும் அவரால் புரிந்து பேச முடியாது.

அதனால் எஸ்என் சுரேந்தர்தான் அவரது குரலாக, மோகன் நடித்த படங்களில் வாழ்ந்தார் என்பதுதான் உண்மை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே, மோகன் – எஸ்என் சுரேந்தர் உறவில் விரிசல் ஏற்பட்டு, மோகனுக்கு எஸ் என் சுரேந்தர் பின்னணியே பேசுவதில்லை. இந்த சூழலில், கோட் படத்தில் நடிகர் மோகனுக்கு பின்னணி பேசுவது யார், அல்லது அவரே சொந்தமாக பேசுகிறாரா என்பதில் மர்மம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்