தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு பாயும் என்பது பழமொழி. அதை நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு விஷயத்தில் ஸ்ட்ராங்காக நிரூபித்து வருகிறார். அது என்னவென்றால், கமல்ஹாசன் திருமணம் செய்யாமலேயே கவுதமியுடன் லிவிங் டு கெதர் என்ற முறையில் குடும்பம் நடத்தினார். அதையே அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் மும்பையில், தனது ஆண் நண்பர் ஒருவருடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
ஸ்ருதிஹாசன் நல்ல பாடகி. பல படங்களில் அவர் பாடியிருக்கிறார். பல மியூசிக் ஆல்பங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். லைவ் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடக்கூடியவர் அதுமட்டுமின்றி பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் குறைந்த எண்ணிக்கையில் நடித்தாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
திருமண வயது கடந்து பல ஆண்டுகளான நிலையில், இன்னும் திருமணம் குறித்த எந்த ஆர்வமோ, அவசியமோ இல்லாத ஒரு முரட்டு சிங்கிளாகவே அவர் மும்பையில் இருக்கிறார். ஆனால் லிவிங் டு கெதர் முறையில் அவர் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி வெளியிடுகிறார்.
இந்த சூழலில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னை பற்றிய பல விஷயங்களை நேரடியாக பகிர்ந்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். அதில் அவர் கூறியதாவது, நான் கடந்த 8 ஆண்டுகளாக தான் தெளிவாக இருக்கிறேன். குடிக்காத பழக்கம் உள்ளவர்கள், பார்ட்டிகளில் மற்றவர்களின் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்வது மிகவும் சிரமம். நிதானமாக இருப்பது உங்கள் வாழ்நாளில் சில காலமாக இருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அந்த நிதானம் இருக்கலாம்.
நான் போதை பொருட்களை எப்போதும் பயன்படுத்திக்கொண்டு அடிமையாக இருந்தது இல்லை. ஆனால் ஒரு சமயத்தில் மதுபானம் எனது வாழ்க்கையில் மிக பெரிய விஷயமாக, மிக முக்கியமானதாக இருந்தது. அது எனக்கு பாசிட்டிவ் ஆக இருக்கவில்லை. நான் எப்போதும் மது மயக்கத்தில்தான் இருந்தேன். மதுபழக்கம் உள்ள என் நண்பர்களுடன் மதுவை குடித்தேன். பின்னர் அப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து விலகி விட்டேன், என்று தனது மதுப்பழக்கம் குறித்து கூறியிருக்கிறார்.
பெண்களின் உரிமை, பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் கமல்ஹாசன் தன் மகளின் இந்த வெளிப்படையாக கருத்துக்கு என்ன சொல்லப் போகிறார் என தெரியவில்லை. ஆனால், பெற்ற மகள் இந்த நிலையில் இருந்திருக்கிறார். மதுபானம் பழக்கம் இருந்ததாக கூறியிருக்கிறார். லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்கிறார். அந்த மகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியாத கமல்ஹாசன், இருண்டு கிடக்கும் தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற அரசியல் களத்தில் டார்ச் லைட்டுடன் வந்துக்கொண்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.





