- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டார் ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாலிவுட் ஸ்டார் ஹிருத்திக்...

என்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டார் ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாலிவுட் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் – என்ன தலைவரே இதெல்லாம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நடிகர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருந்து வருகிறார். 73 வயதிலும் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால், தமிழ் சினிமாவில் அவரது கெத்து வேற லெவலில் இன்னும் இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என தமிழக மக்களில் ஒரு தரப்பினர் மிகவும் ஆசைப்பட்டனர். ஆனால் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி விட்டு திடீரென பின்வாங்கி விட்டார். அதற்கு முக்கிய காரணம், தன்னை நம்பி ஓட்டுப் போடும் மக்களுக்கு உண்மையிலேயே நாம் நல்லாட்சி தர முடியுமா என்ற அச்சம் தானே தவிர, வேறொன்றும் இல்லை.

ஏனெனில் அரசியலை பொருத்த வரை எல்லா விஷயங்களையுமே அவரே நேரடியாக கவனித்துவிட முடியாது. எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் கண்காணிக்கவும் முடியாது. பிறரை நம்பி ஒப்படைக்கப்படும் பொறுப்புகள், அவர்கள் சிறப்பாக நடத்திவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் அதுவே அவர்கள் குளறுபடி செய்தால், மொத்த பழியும், குற்றச்சாட்டும் தன்மீதுதான் வரும் என்று கவலைப்பட்டு தான் ரஜினி, தனது அரசியல் முடிவை மாற்றிக்கொண்டதாக அப்போதே பேசப்பட்டது.

ரஜினி அந்த அளவுக்கு பண்புமிக்க மனிதராக இருப்பதால்தான் எல்லோருக்குமே பிடித்த மனிதராக அவர் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் பாலிவுட்டில் சிறந்த நடிகராக, முன்னணி நடிகராக இருந்துவரும் ஹிருத்திக் ரோஷன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரஜினிகாந்த் தன்னிடம் பலமுறை ஸாரி சொன்ன விஷயத்தை அவர் பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது ரஜினி நடிக்க வந்த காலகட்டத்தில் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் சில படங்களில் நடித்தார். அப்போது 1986ம் ஆண்டில் பகவான் தாதா என்ற படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார். அப்போது அந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அப்போது ஹிருத்திக் ரோஷன் குழந்தை என்பதால் அவரை மிகவும் கவனமாக, வசதியாக ரஜினி பார்த்துக்கொண்டுள்ளார்.

ஒரு காட்சியில் ஹிருத்திக் ரோஷன் டயலாக் பேசியதில் பயங்கரமாக சொதப்பிய நிலையில், ரஜினிகாந்த் குழந்தையை சமாதானப்படுத்தும் விதமாக ஸாரி, ஸாரி என பலமுறை சொல்லி, குழந்தை ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்திருக்கிறார். அப்படி சிறு குழந்தையான என்னை அவர் அவ்வளவு மரியாதையாக நடத்திய விதத்தை பார்த்துதான், மரியாதை என்ற உயர்ந்த விஷயத்தையே கற்றுக்கொண்டேன் என, தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

சற்று முன்