- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கே இப்படி ஒரு துரோகம் செய்தாரா நடிகர் வடிவேலு, போண்டாமணி சொன்ன உண்மை...

தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கே இப்படி ஒரு துரோகம் செய்தாரா நடிகர் வடிவேலு, போண்டாமணி சொன்ன உண்மை சம்பவம் – வைரலாகும் வீடியோ

- Advertisement -

நடிகர் போண்டாமணி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் போண்டா மணி நடித்திருக்கிறார். பாரதி கண்ணம்மா, கண்ணும் கண்ணும், சுந்தரா டிராவல்ஸ், ஆறு, கருப்பசாமி குத்தகைதாரர் என பல படங்களில் நடித்தவர் போண்டாமணி. சமீபத்தில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர், இன்று மறைந்துவிட்டார்.

போண்டாமணி மட்டுமின்றி முத்துக்காளை, சிங்கமுத்து, மயில்சாமி, செல்லதுரை, வெங்கல் ராவ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், அல்வா வாசு, சுப்புராஜ், சுமதி, தம்பி ராமையா, நெல்லை சிவா என பலரும் அவருடன் காமெடி காட்சிகளில் நடித்திருக்கின்றனர். பல படங்களில் வடிவேலு காமெடி மிக சிறப்பாக இருக்க காரணம், அவருடன் நடிக்கும் நடிகர்களின் மிக திறமையான நடிப்பும்தான் என்பதை மறுக்க முடியாது.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளாக அவர் பட வாய்ப்புகளை இழந்த நிலையில், சில படங்களில் மீண்டும் நடித்தார். கத்தி சண்டை, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, எலி போன்ற படங்களில் அவரது காமெடி நடிப்பு எடுபடவில்லை. முன்பு போல் வடிவேலு இல்லை. அவரை ரசிக்க முடியவில்லை என்று ரசிகர்களும் கூற துவங்கிவிட்டனர். அதன்பிறகுதான், மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக அந்த வித்யாசமான கேரக்டரில் வடிவேலு நடித்தார்.

வடிவேலு சிறந்த நடிகராக இருந்தாலும், உண்மையில் அவரது நிஜமுகம் வேறாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு நடந்த சம்பவம் இது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகர் போண்டாமணி, சினிமா விமர்சகர் செய்யாறு பாலுவிடம் கூறியிருக்கிறார். இப்போது போண்டாமணி இறந்த நிலையில், அவர் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய செய்யாறு பாலு இதுபற்றி கூறியிருக்கிறார். வடிவேலு இவ்வளவு பெரிய துரோகத்தை செய்தவரா என்றுதான் அந்த சம்பவம் வருத்தப்பட வைக்கிறது.

- Advertisement -

ஒரு படத்தின் ஷூட்டிங்கில் வடிவேலு நடித்த காமெடி காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வடிவேலுவின் அன்றைய ஒருநாள் சம்பளம் ரூ. 10 லட்சம். அந்த படத்தின் புதிய தயாரிப்பாளர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் அன்றைய சம்பளமாக ரூ. 20 ஆயிரம் தர முன்வந்துள்ளார். வடிவேலுவுக்கு 10 லட்சம் ரூபாய் தரும்போது அவருடன் நடித்த காமெடி நடிகர்களுக்கும் நல்ல சம்பளம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் இதை அவர் செய்திருக்கிறார். இது வடிவேலு காதுகளுக்கு போயிருக்கிறது.

தயாரிப்பாளரை அழைத்து பேசிய வடிவேலு, எதுக்காக இவ்வளவு சம்பளம் தர்றீங்க, நாளைக்கு அவங்க வர்ற தயாரிப்பாளர் கிட்ட எல்லாம் 20 ஆயிரம் ரூபா சம்பளம் கேட்பாங்க. இந்த பழக்கம் எல்லாம் வேணாம். 1500 ரூபா மட்டும் சம்பளம் கொடுங்க, என சொல்லி அந்த 1500 ரூபாய்தான் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது. அப்படி தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கே துரோகம் செய்யும் குணம் கொண்டவர் வடிவேலு. இதை போண்டாமணி ஒருமுறை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்று, செய்யாறு பாலு அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்