- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பில் வெங்கட் பிரபு குழுவுக்கும் - விஜய்க்கும் இடையே உரசலா... செம கடுப்பில் இருக்கிறாராம் தளபதி......

படப்பிடிப்பில் வெங்கட் பிரபு குழுவுக்கும் – விஜய்க்கும் இடையே உரசலா… செம கடுப்பில் இருக்கிறாராம் தளபதி… என்னங்க நடக்குது…

- Advertisement -

2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம், கலமையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் குடும்ப ஆடியன்ஸ்களை கவர்ந்ததால் நல்ல வசூல் பெற்றது. இதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்தார் விஜய்.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், வசூலில் சக்கை போடு போட்டது. இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதன் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தனது 68வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.

- Advertisement -

சென்னை 600028, மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இதனை எடுத்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதால், விஜய்க்கு இரண்டு கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது.

படத்தில் விஜய்யை மிக இளமையான தோற்றத்தில் காட்டுவதற்காக முடிவெடுத்துள்ளார் வெங்கட் பிரபு. இதற்காக சூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே வெங்கட் பிரபு, விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகிய மூன்று பேரும் கலிபோர்னியா சென்றனர். அங்கு ஏ ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி அவரது வயதை குறைவாக காட்டும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், பிரேம்ஜி அமரன், வைபவ், இவானா, யுகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டெல்லி தாய்லாந்து துருக்கி ஹைதராபாத் பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்றது. அடுத்ததாக சென்னையில் படப்பிடிப்பை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் பெயரை புத்தாண்டு தினத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். அனேகமாக இதற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது வெங்கட் பிரபு படக்குழுவிற்கும், விஜய்க்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான நேரத்திற்கு விஜய் படப்பிடிப்புக்கு சென்றாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு பட குழு தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. தாய்லாந்தில் இதே நிலைத் தொடர்ந்ததால் கோபப்பட்ட விஜய் தயாரிப்பு நிறுவனத்திடம் கடிந்து கொண்டாராம். இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் அவரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போதும் இதே நிலை தொடர்வதால் அதிருப்தி அடைந்துள்ள விஜய் எதுவும் பேசாமல் நடித்து விட்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்