தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என அழைக்கப்பட்ட நடிகர் சிவக்குமார். அவரது மூத்த மகன்தான் நடிகர் சூர்யா. தனது படிப்பை முடித்துவிட்டு திருப்பூரில் சில ஆண்டுகள் கார்மென்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவரது பெயர் சரவணன். சினிமாவுக்காக சூர்யா என பெயர் மாற்றப்பட்டார்.
நேருக்கு நேர் படம்தான் சூர்யாவின் முதல் படம். வசந்த் இயக்கிய இந்த படத்தில் விஜய் நடித்திருந்தார். விஜய்க்கு கவுசல்யாவும், சூர்யாவுக்கு சிம்ரனும் இந்த படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். ஸ்கூல் பையன் மாதிரி இருக்கிறார் என்பதுதான் இந்த படத்தில் சூர்யாவை பார்த்து பலரும் சொன்ன கமெண்ட்.
ஆனால் இந்த விமர்சனத்தை மௌனம் பேசியதே படம் மூலம் மாற்றி அமைத்தவர் இயக்குநர் அமீர். அந்த படத்தில் தான் நடிப்பு, முக பாவனை, வசனம் உச்சரிப்பு, பார்வைகளில் காட்டும் உணர்வுகள் என பல விஷயங்களை கற்றுத் தந்தார் அமீர். ஒரு நடிகராக சூர்யா இதில் பாஸ் மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றார்.
அதன்பின்னர் நந்தா படத்தில், இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்தார். இந்த படத்தில் சூர்யா நடிப்பு வேற லெவலில் இருந்தது. மொட்டை தலையுடன் மூர்க்கத்தனமான ஒரு மனிதராக நடிப்பில் தரமான சம்பவம் செய்துகாட்டிய சூர்யாவை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். இதில் ராஜ்கிரண் நடிப்பும் பேசப்பட்டது. லொடுக்கு பாண்டியாக கருணாஸ் பெயர் வாங்கியும் இந்த படம்தான்.
அதன்பிறகு பிதாமகன் படத்தில் டைரக்டர் பாலா இயக்கத்தில் நடித்த சூர்யா பல படங்களில் நடித்து முன்னணி டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக மாறினார். இந்நிலையில் டைரக்டர் பாலா இயக்கிய வணங்கான் படத்தில் சூர்யா 2 ஷெட்யூல்களில் மட்டும் நடித்த நிலையில் திடீரென விலகிவிட்டார். இதையடுத்து சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் அருண்விஜய் நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சினிமா விமர்சகர் சுபேர், இதுகுறித்து கூறுகையில், சூர்யா பெரிய நடிகராகி, முன்னிலைக்கு வந்துவிட்டார். ஆனால் அவரை நந்தா படத்தில் நடித்த சூர்யாவை போலவே நடத்தி இருக்கிறார். ஒருமுறை, வயிறு வலிப்பதாக சூர்யா, பாலாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர், ஏன் பீரியட்ஸா என கிண்டலாக கேட்டிருக்கிறார். இப்படி அசிங்கமாக பாலா கேட்டதால் விரக்தியடைந்துதான் சூர்யா அந்த படத்தை விட்டு விலகினார், என சுபேர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





