- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் செய்திருக்கும் அந்த விஷயம், இன்னும் ஜீன்ஸ் பட காலத்திலேயே பிரமாண்ட இயக்குனர் இருக்கிறாரே?...

இயக்குனர் ஷங்கர் செய்திருக்கும் அந்த விஷயம், இன்னும் ஜீன்ஸ் பட காலத்திலேயே பிரமாண்ட இயக்குனர் இருக்கிறாரே? – லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களை திணற வைக்குதே!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் எப்போதுமே ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற படைப்பாளிகளாக இருக்கின்றனர். அதற்கு அவர்கள் இயக்கும் படங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கமும், அவர்களது படங்கள் ரசிகர்களுக்கு தரும் ஒரு உத்வேகமும்தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குறிப்பாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஆர்வமும் அந்த படத்தை காண்பதற்கான விருப்பமும் ஏற்படுகிறது. பிரம்மாண்டம் என்பது அவரது படங்களில் மிகவும் ரசிக்கக் கூடிய வகையிலும் மிகவும் அதிசயத்தக்க வகையிலும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில படங்களில் பிரமாண்டத்தில் ஷங்கர் மிரட்டியிருப்பார்.

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன், காதலன், முதல்வன், அந்நியன், இந்தியன், சிவாஜி, எந்திரன், ஜீன்ஸ், பாய்ஸ், நண்பன் உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களாக இருந்தன. இதில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம் மட்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தியன் 2 படத்தின் திரைக்கதை சரியாக இல்லாததால் ரசிகர்களுக்கு பலத்தை ஏமாற்றம் ஏற்பட்டது. திரைக்கதை ஆசிரியர் சுஜாதா இல்லாததால் ஷங்கரால் சரியான பாதையில் திரைக்கதையை கொண்டு செல்ல முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் இந்தியன் 2ம் பாகத்தை எடுக்கும்போது இந்தியன் 3ம் பாகத்தையும் சேர்த்து இயக்கியதால் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தியன் 2 படம் பலத்த சொதப்பியது.

- Advertisement -

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி வெளியாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை படமாக இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் 2வது சிங்கிள் நாளை வெளியாகிறது. ஜீன்ஸ் படத்தில் ஏழு உலக அதிசயங்களை, பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற பாடல் காட்சியில் வைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர். அதேபோல் இந்த படத்திலும்ஒரு பாடல் காட்சியில் 7 மாநிலங்களின் இசையை கொண்டு வந்திருக்கிறார். ஜீன்ஸ் படத்தில் ஏழு அதிசயங்கள் பாடல் போல, சேம் சேஞ்சர் படத்தில் ஏழு மாநிலங்களின் இசையை ஒரு பாடல் காட்சியில் ஷங்கர் கொண்டு வந்திருக்கிறார். இது பான் இந்தியா படம் என்பதால், ஏழு மாநிலங்களின் இசையுடன் உள்ள இந்த பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்