- Advertisement -
Homeபொழுதுபோக்குவானத்தை போல மனம் படைச்ச மன்னவன் கேப்டன், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த்...

வானத்தை போல மனம் படைச்ச மன்னவன் கேப்டன், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

- Advertisement -

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் சாலிக்கிராமம் வீட்டில் இருந்து நேற்று, கோயம்பேடு கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், ஒருகட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல், இன்று காலை கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், விஜயகாந்த் உடலுக்கு கதறி அழுதபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

தமிழக கவர்னர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், விஜய், இளையராஜா, பார்த்திபன், ராம்கி, லிவிங்ஸ்டன், ஸ்ரீகாந்த், தேவா, விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று மாலை சென்னை தீவுத்திடல் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயம்பேடு தலைமை தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் காத்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

- Advertisement -

தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இறுதி சடங்கில் பங்கேற்று விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரையில் பிறந்த விஜயகாந்த், எந்த பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகராகி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்தார். பசி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசியாற்றினார். கேட்டவர்களுக்கு எல்லாம் ஓடி ஓடி உதவிகள் செய்தார். மனிதநேயம் மிக்க மனிதராக, வானத்தை போல மனம் படைத்த சொக்கத் தங்கமாக வாழ்ந்து மறைந்தார். அவர் மறைந்தாலும், மக்களின் மனங்களில் அவர்களில் நினைவுகளில் இன்னும் பல நூறாண்டுகள் வாழ்வார் கேப்டன், வாழ்க அண்ணாரது புகழ்! ஓம் சாந்தி!

- Advertisement -

சற்று முன்