- Advertisement -
Homeபொழுதுபோக்கு2023ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் டாப் 10ல் இடம்பிடித்த சிறந்த படங்கள், மனதை கவர்ந்த சிறந்த...

2023ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் டாப் 10ல் இடம்பிடித்த சிறந்த படங்கள், மனதை கவர்ந்த சிறந்த கதையாக மக்கள் கொண்டாடிய படங்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 280க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. இதில் பெரிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. இதில் மக்கள் மனம் கவர்ந்த படங்கள், பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இருந்தன. ஆனால் அவை மக்கள் மனங்களில் பெரிய அளவில் இடம்பிடித்தன.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம், இளையராஜா இசையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக அமைந்தது. நடிகர் சூரி, கதையின் நாயகனாக வெற்றி பெற்றார். தொடர்ந்து குறட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குட்நைட் படமும், மனித உணர்வுகளை பேசுகிற சிறந்த படமாக இருந்தது. இதில் மணிகண்டன் பெரிய அளவில் பேசப்பட்டார்.

- Advertisement -

அடுத்து கவின் நடித்த டாடா படம் தந்தை,குழந்தை பாசத்தை மையப்படுத்திய சிறந்த படமாக இருந்தது. அடுத்து பார்க்கிங் படம் மிக யதார்த்தத்தை சொன்ன படமாக அமைந்தது. வாகனம் நிறுத்தும் சண்டையை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

இந்த ஆண்டின் ஆகச்சிறந்த படமாக தமிழில் வெளியான படம் சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி. மந்திரமூர்த்தியின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் கதை, திரைக்கதை, படத்தின் மையக்கரு உணர்வை தொட்ட படமாக ரசிகர்களுக்கு அமைந்தது. அதே போல் பூ ராமு, காளிவெங்கட் நடித்த கிடா படமும் யதார்த்த சினிமாவாக இருந்தது.

- Advertisement -

அதே போல் கூழாங்கல், தண்டட்டி, இறுகப்பற்று, சித்தா ஆகிய படங்களும் இந்த ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த படங்களாக இருந்தன. குறிப்பாக சித்தா படம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த படமாக அமைந்தது. இந்த 10 படங்களுமே ஏதோ விதத்தில் மனித உணர்வுகளை தொடுகிற அம்சத்தில் சிறந்த படங்களாக இருந்திருக்கின்றன.

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் எடுக்கப்படும் விக்ரம், லியோ, ஜெயிலர் போன்ற படங்களை காட்டிலும் இதுபோன்ற உணர்வை தொடும், சமூக உணர்வுகளை, குடும்ப உறவுகளை சொல்லும் படங்களே ரசிகர்களுக்கு மிக தேவையானதாக இருக்கின்றன. இதுபோன்ற படங்களை வரவேற்க ரசிகர்களும் தயாராகவே இருக்கின்றனர். வரும் 2024ம் ஆண்டில், இப்படிப்பட்ட சிறந்த படங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்க வேண்டும்.

- Advertisement -

சற்று முன்