- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவப்பு கொடியை துரத்திச் செல்லும் காளைகள் நிலையில் நானும் உள்ளேன் - நடிகை நஸ்ரியா பதிவால்...

சிவப்பு கொடியை துரத்திச் செல்லும் காளைகள் நிலையில் நானும் உள்ளேன் – நடிகை நஸ்ரியா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

- Advertisement -

மலையாளத்தில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நஸ்ரியா. இவர் தமிழில் ராஜா ராணி நையாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். காதலுக்கு மரியாதை பூவிழி வாசலிலே போன்ற படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் பாசில் மகன் நடிகர் பகத் பாசிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து நஸ்ரியா ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் திரைப்படங்களில் நஸ்ரியா நடித்து வருகிறார். நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் மலையாளம் தமிழில் பிஸியான ஒரு முன்னணி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழில் அவர் வேலைக்காரன் வேட்டையன் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை நஸ்ரியாவும் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நஸ்ரியா நடிப்பில் வெளியான சூட்சும தர்ஷினி மலையாள படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து தமிழில் ஒரு படத்தில் நஸ்ரியா நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது வலைதள பக்கத்தில் நடிகை நஸ்ரியா ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, சிவப்பு கொடியை துரத்திச் செல்லும் காளைகளுக்கு பைத்தியம் என்று நான் நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் இப்போது நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன் என்று வித்யாசமாக நஸ்ரியா பதிவிட்டுள்ளார். அவர் இப்படி பதிவிட்டுள்ளதால் இவருக்கும் பகத் பாசிலுக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா என்கிற கோணத்தில் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தையும் கவலையையும் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் நஸ்ரியா தற்போது மலையாளத்தில் எல் கிளாசிகோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஸ்பெயின் நாட்டின் பின்னணியை கொண்டது.

அதில் காளை சண்டை மற்றும் கால்பந்து தொடர்பான கதைக்களம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பிடும் விதமாக தான் காளை மற்றும் சிவப்பு கொடி என்கிற வார்த்தைகளை நஸ்ரியா குறிப்பிட்டார் என்றும் கூறப்படுகிறது. அதனால் இது அந்த படத்திற்கான பிரமோஷன் யுக்தியாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அப்படி இல்லாத பட்சத்தில் எதுக்கு இப்படி ஒரு வித்தியாசமான பதிவை அவர் செய்திருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்