- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாருக்கு அந்த சம்பளம்தான் தர முடியும், கறாராக ஒரே முடிவில் நின்ற தயாரிப்பு நிறுவனம் -...

அஜீத்குமாருக்கு அந்த சம்பளம்தான் தர முடியும், கறாராக ஒரே முடிவில் நின்ற தயாரிப்பு நிறுவனம் – ஆதிக் ரவிச்சந்திரன் படம் கை மாறிய கதை இதுதானா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் கடந்த 3 மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து கடும் பனி, குளிர், மணல் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அஜர்பைஜானில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

இதையடுத்து படக்குழு, கடந்த வாரத்தில் சென்னை திரும்பியது. மீண்டும் 7ம் தேதி அஜர்பைஜான் செல்ல விடாமுயற்சி படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இயற்கையின் சீற்றம் குறைந்தால் மட்டுமே, அங்கு படப்பிடிப்பை தொடர முடியும். இல்லை என்றால், வேறு லோகேஷன்தான் பார்க்க வேண்டும். தற்போது அஜீத்குமார், குடும்பத்துடன் துபாயில் இருக்கிறார்.

- Advertisement -

விடாமுயற்சி படப்பிடிப்பை வரும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட்டு, மார்க் ஆண்டனி பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜீத்குமார் நடிக்கிறார். தெலுங்கு சினிமாவுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது. ஆனால் அஜீத் படங்களின் மொத்த பிஸினஸ் ரூ. 250 கோடியாக இருந்து வருவதால், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடியாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் நடிக்க அஜீத்குமார் சம்பளம் 165 கோடி ரூபாய் என்ற நிலையில், படத்தின் பட்ஜெட் கணக்கிலேயே ரூ. 50 கோடி ரூபாய் கூடுதலாக இருந்தது. இந்த டேபிள் லாஸ் ரூ. 50 கோடியை தயாரிப்பு நிறுவனம் தவிர்க்க வேண்டும் என்பதால், ரூ. 115 கோடி வரை, அஜீத்குமாருக்கு சம்பளமாக தர முன்வந்தது.

ஆனால் சம்பள குறைப்புக்கு அஜீத் தரப்பு ஒத்துக்கொள்ளாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை தயாரிக்கும் விலகிக் கொண்டது. ஏனெனில் இந்த படத்தை 2 பாகங்களாகவும் எடுக்க முடியாது. ஏனெனில், 2ம் பாகத்தில் நடிக்கவும் அதே சம்பளம் அஜீத்குமாருக்கு வழங்க வேண்டும். பான் இந்தியா படமாகவும் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் சத்யஜோதி பிலிம்ஸ் பின்வாங்கியது., இப்போது ரூ. 300 கோடி பட்ஜெட்டில், அஜீத்குமாருக்கு ரூ. 163 கோடி சம்பளத்துடன் மைத்ரி மூவி மேக்கஸ் நிறுவனம் அவரது அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்