நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிறகு அவர் மற்றவர்களுக்கு உதவியதை எல்லாம் பலரும் பகிர்ந்து, அவரது நல்ல குணத்தை பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் ஆரோக்கியமாக இருந்த கேப்டன் இப்படி ஒரு நோயாளியாக மாறி இறந்து போக என்ன காரணம் என்ற கேள்வியும் பலருக்கு எழுந்து வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, விஜயகாந்தை பொருத்தவரை நியாயமான மனிதர். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக்கூடியவர். கருணாநிதிக்கு தங்க பேனா கொடுத்தவரும் அவர்தான். அவரை தாறுமாறாக விமர்சனம் பேசியதும் அவர்தான். எதையும் பாரபட்சமின்றி செய்பவர், சொல்பவர் விஜயகாந்த்.
கடந்த சில ஆண்டுகளாகவே கேப்டனின் பேச்சில் தடுமாற்றம், ஞாபக மறதி இருந்து வந்தது. ஏன் அப்படி அவர் இருந்தார் என்பது இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. இதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டனவா, என்ன மாதிரியான சிகிச்சைகள் தரப்பட்டன என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அவரது பேச்சுத்திறன் குறைந்துக் கொண்டே வந்திருக்கிறது.
அவருக்கு என்ன நோய், எதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டதால் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது. சிங்கப்பூரில் விஜயகாந்துக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற விஷயங்கள் எல்லாம் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதுகுறித்த சந்தேகங்களை ஒரு நாளில் தேமுதிக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கேப்டனின் உண்மையான விசுவாசிகள் கேட்டால், பிரேமலதா பதில் சொல்ல வேண்டும்.
விஜயகாந்த் இறுதிச்சடங்கில் பிரேமலதா, அவரது மகன்கள், சுதீஷ் போன்றவர்கள் இருந்தனர். ஆனால் விஜயகாந்தின் மதுரைக்கார சொந்தங்கள், 2 வேன்களில் புறப்பட்டு வந்தனர். கேப்டனின் அக்கா குடும்பத்தினர், தம்பிகள் இருவர் என அனைவரும் வந்தனர். ஆனால் அந்த இறுதிச்சடங்கில் எங்கும் பார்க்க முடியவில்லை. இதன்மூலம் மதுரை வழி உறவுகளுக்கும், விஜயகாந்த் குடும்பத்துக்கும் நெருக்கமில்லை என்று தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி கேப்டன் விஜயகாந்துக்கு நெருக்கமான பல நண்பர்கள், விஜயகாந்தை சந்திக்கவும், நேரில் பேசவும் அதிக ஆர்வம் காட்டி கேட்ட போதெல்லாம், இன்பெக்சன் ஆகிவிடும் என்ற காரணத்தை சொல்லி, கேப்டனிடம் யாரும் நெருங்காமல் பார்த்துக்கொண்டார் பிரேமலதா என்ற குற்றச்சாட்டும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.





