- Advertisement -
Homeபொழுதுபோக்குதமன்னா பாடலுக்கு பின் வெளியான ரஜினி பாடல், இயக்குனர் நெல்சனின் தந்திரம் இதுதான், ஓஹோ

தமன்னா பாடலுக்கு பின் வெளியான ரஜினி பாடல், இயக்குனர் நெல்சனின் தந்திரம் இதுதான், ஓஹோ

- Advertisement -

“ஜெயிலர்” திரைப்படத்தில் முதல் சிங்கிள் பாடலாக “காவாலயா” பாடல் வெளிவந்தது. முழுக்க முழுக்க தமன்னாவே ஆட்கொண்ட இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பல வருடங்கள் கழித்து தமன்னா சொக்க வைக்கும் ஒரு நடனத்தை அளித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். மேலும் இப்பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான பாடலாகவும் வலம் வருகிறது.

ஒரு பக்கம் இப்பாடல் பலரையும் ரசிக்க வைத்திருந்தாலும் மறுபக்கம் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடித்த திரைப்படத்திற்கு முதல் சிங்கிளாக தமன்னாவின் பாடலை வெளியிட்டது ரஜினி ரசிகர்களை கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்தியது. அது மட்டுமல்லாது இந்த பாடலில் ரஜினி சில நொடிகளே தென்பட்டார் என்பதால் இணையத்தில் பலரும் அதனை கேலி செய்தனர்.

- Advertisement -

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் “Hukum” பாடல் வெளிவந்தது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிகாந்திற்கான மாஸ் எலெமன்ட்டுகளை கொண்டிருந்தது. இந்த பாடலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருந்த வசனம் ரசிகர்களுக்கு Goosebumps ஆக இருந்தது. மேலும் இதில் இடம்பெற்ற பாடல் வரிகள் அனைத்தும் ரஜினிகாந்துதான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை தொனிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட மாஸ் ஆன “Hukum” பாடலை எழுதியவர் சூப்பர் சுப்பு. இவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது ரஜினிகாந்த் படத்தில் தமன்னா பாடலை முதலில் வெளியிட்டதற்கான காரணத்தை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலில் பாட்ஷா அடிவாங்குவார். அதன் பிறகு பாட்ஷா அதனை இரண்டு மடங்காக திருப்பி தருவார். அப்படி வந்ததுதான் இரண்டாவது பாடல். இது நெல்சனும் சன் பிக்சர்ஸும் இணைந்து செய்த தந்திரம்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்