- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்கப் போவது இந்த அரசியல் கட்சித்...

விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்கப் போவது இந்த அரசியல் கட்சித் தலைவரா?… தம்பிகளை கையில் பிடிக்க முடியாதே பா…

- Advertisement -

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. இதனால் அந்தப் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்றும் பலருக்கு தெரியாமல் போனது. இப்படியான சூழலில் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடித்திருந்தார்.

அடுத்து திரைப்படத்தை எப்படியாவது வெற்றிக்கு படமாக கொடுக்க வேண்டும் என்ற முடிப்பில் செயல்பட்ட அவர், நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி வெற்றி சிகரத்திற்கு சென்றார். படத்தில் நடித்த நயன்தாராவையும் காதலித்து பின்னாளில் திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடிதான் திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யாவுடன் இணைந்த விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.

- Advertisement -

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த அவர், நயன்தாரா சமந்தா கூட்டணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனத்தையே இது பெற்றது.

இப்படியான சூழல்தான் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அவர் இந்த படத்தை இயக்குவார் என்றும், இதனை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக படத்தில் இருந்து அவர் விலகினார். இதன்பிறகு விடாமுயற்சி என டைட்டில் அறிவிக்கப்பட்டு அஜித் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

- Advertisement -

அஜித் படம் கைவிட்டு போன நிலையில், சில நாட்கள் ஓய்வில் இருந்த விக்னேஷ் சிவன், தற்போது தனது பழைய கதையான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் தற்போது லவ் டுடே பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இதில் இணைந்திருக்கிறார். கீர்த்தி செட்டி எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதனிடையே எல்ஐசி டைட்டில் தொடர்பாக விக்னேஷ் சிவனுக்கு பிரச்சனை ஒரு பக்கம், அந்தப் படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நடிக்கிறாராம். இயற்கை விவசாயத்தை நினைவூட்டும் வகையில் அவரது கதாபாத்திரம் இருக்குமாம். விவசாயம் சார்ந்த பின்புலம் என்பதால் புதிய கீதை திரைப்படத்தின் இயக்குனர் ஜெகன்நாத், இதில் உதவி இயக்குனராக பணிபுரிகிறாராம். அவர் கேட்டுக் கொண்டதற்காகவே சீமான் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தந்தையாக நடிக்கும் சீமானுக்கு அப்படியே நேர் எதிரான கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன் வருவாராம். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்